யேசு சபை துறவி போல் சற்குண நாயகம் அடிகளாரின் பிறந்த தின சிறப்புத் திருப்பலி


  (லியோன்)

இலங்கை நாட்டின் முன்னேற்றப் பாதையிலே கல்வி ,விளையாட்டு , வரலாறு , உளவியல் ,சமூக பொருளாதாரம் மற்றும் ஆன்மிகம் போன்ற துறைகளில் கத்தோலிக்க மத குருக்கள் கணிசமானளவு பங்களிப்பு செய்கிறார்கள் .


கத்தோலிக்க மதகுருமார்களிலும் சிறப்பாக யேசு சபைத் துறவிகள் பல சேவைகள் செய்துகொண்டு வருகிறார்கள் .

அந்த வகையில் யேசு சபை துறவி போல் சற்குண நாயகம் ஒரு கத்தோலிக்க குருவின்  யேசு சபைத் துறவியின் பணி என்ற வரம்பை கடந்த தனி மனித  ஒருங்கமைவிற்கு, சமுதாய ஒருங்கமைவிற்கு தலைமை வகுத்து , மனிதத்தையும் ,சமுதாயத்தையும் கட்டி எழுப்பி இறையியலுக்குள் வலுவூட்டி ஆன்மீக வழிகாட்டியாக விளங்குகின்ற யேசு சபை துறவி போல் சற்குண நாயகம் அடிகளாரின் 80 பிறந்த தினத்தை சிறப்பிக்கும்  விசேட திருப்பலி இன்று ஒப்புகொடுக்கப்பட்டது .

மட்டக்களப்பு மறை மாவட்ட கிறிஸ்தவ வாழ்வு சமூகம் ஒழுங்கமைப்பில் யேசு சபை துறவி போல் சற்குண நாயகம் அடிகளாரின் தலைமையில் அருட்தந்தை லோரன்ஸ் லோகநாதன் ,அருட்தந்தை றோசான் ,அருதந்தை நவாஜி ,அருட்தந்தை ஜோசெப் மேரி ஆகியோர் இணைந்து இந்த  திருப்பலியை ஒப்புகொடுத்தனர் .

இந்த விசேட திருப்பலியில்  மட்டக்களப்பு மறை மாவட்ட கிறிஸ்தவ வாழ்வு சமூகம் அங்கத்தவர்கள் மற்றும் புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலய பங்கு மக்கள்  கலந்து சிறப்பித்தனர் .