மட்டக்களப்பு மாநகரசபையில் பல வட்டாரங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு வசம்?

மட்டக்களப்பு மாநகரசபையின் பல வட்டாரங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றும் நிலையுள்ளதாக வெளிவரும் வாக்குகளின் அடிப்படையில் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாநகரசபையின் திசவீரசிங்கம், கூழாவடி, புளியந்தீவு, ஊறணி,உப்போடை,ஆகிய வட்டாரங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.