துறைநீலாவணை தேர்தல் முடிவுகள்,,,,,,,,


(சசி துறையூர் ) நாடளாவிய ரீதியில்    இன்று    நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்பில் துறைநீலாவணை வாக்காளர்கள் இம் முறை ஆர்வத்துடன் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

அந்த வகையில் இன்றைய வாக்களிப்பு மிகவும் சுமூகமான முறையில் நடைபெற்றுள்ளதாக அறியமுடிகிறது.

துறைநீலாவணையில் 3420 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில்,    துறைநீலாவணை விபுலானந்தா வித்தியாலயம், துறைநீலாவணை மெதடிஸ்த மிசன் தமிழ்கலவன் பாடசாலை,
துறைநீலாவணை மத்திய மாகாவித்தியாலயம், துறைநீலாவணை சித்திவிநாயகர் வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில்    வாக்குப்பதிவுகள் நடைபெற்றன.

அந்தவகையில் இன்று காலை 07.00 தொடக்கம் பிற்பகல் 04.00 மணிவரை நடைபெற்ற வாக்களிப்பின் பிரகாரம்.  கிடைக்கப்பெற்ற  உத்தியோக பற்றற்ற தகவலின் படி .


துறைநீலாவணை விபுலானந்தா வித்தியாலயம், வாக்களிப்பு நிலையத்தில்  1072 வாக்குகளில் 790 வாக்குப்பதிவும்,
வாக்களிப்பு வீதம் 73.69%

துறைநீலாவணை மெதடிஸ்த மிசன் தமிழ்கலவன் பாடசாலை,
686 வாக்குகளில் 493 வாக்குப்பதிவும்,
வாக்களிப்பு வீதம் 71.86%

துறைநீலாவணை மத்திய மாகாவித்தியாலயம்,
654 வாக்குகளில் 461வாக்குப்பதிவும்,
வாக்களிப்பு வீதம் 70.48%

துறைநீலாவணை சித்திவிநாயகர் வித்தியாலயம்
1008 வாக்குகளில் 695 வாக்குப்பதிவும், பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாக்களிப்பு வீதம் 68.94%


கிராமத்தின் மொத்த வாக்களிப்பு வீதம் 71.31%

அதன் அடிப்படையில் துறைநீலாவணை கிராமத்திற்கான வாக்கு எண்ணும் பணிகள் மத்திய நிலையமாக அமைந்த துறைநீலாவணை மட்/பட் மத்திய மாகவித்தியாலய பாடசாலையில் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது

முடிவுகள் இன்று இரவு 09.00 மணியளவில் அறிவீக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.