மெதடிஸ்த மத்திய கல்லூரியின் திறனாய்வு இல்ல விளையாட்டுப் போட்டி


 (லியோன்)

 மட்டக்களப்பு  கல்வி  வலயத்திற்குட்பட்ட   மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 2018 ஆண்டுக்கான  மெய்வல்லுனர்  திறனாய்வு இல்ல விளையாட்டுப் போட்டி   இன்று பிற்பகல் மட்டக்களப்பு வெபர்  மைதானத்தில்  நடைபெற்றது.


கல்லூரி அதிபர் ஜெ ஆர்  டி . விமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் விருந்தினர்களாக  கிழக்குமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச் இ எம் டப்ளியு ஜி  டி திசாநாயக , மட்டக்களப்பு கல்லடி  38 வது தேசிய மாணவ படை  அணியின்  லெப்டினல் கேணல்  ஜே எ யு ஜே பி . ஜெயசூரிய ,மட்டக்களப்பு  வலயக் கல்விப்பணிப்பாளர் கே பாஸ்கரன் , மன்முனை வடக்கு  கோட்டக்கல்வி பணிப்பாளர்  கே .அருள்பிரகாசம், உதவிக் கல்விப் பணிப்பாளர் உடற்கல்வி வி .லவக்குமார்,  கல்லூரி அபிவிருத்தி குழு செயலாளர் டி எ .பிரகாஸ் , கல்லூரி பழைய மாணவ சங்க தலைவர் எஸ் .சசிஹரன் ஆகியோர் கலந்துகொண்டனர் .

ஆரம்ப   நிகழ்வாக   கல்லூரி  மாணவர்களால்  அதிதிகளுக்கு  மாலை  அணிவித்து  அழைத்து  வரப்பட்டனர்

அதனை   தொடர்ந்து   தேசிய  கொடி,    கல்லூரி கொடி  மற்றும் இல்லக்கொடிகள்  ஏற்றப்பட்டு  தேசிய கீதம்  இசைக்கப்பட்டதுடன்   மாணவர்களின்  இல்ல  அணிவகுப்பு   நடைபெற்றது

இதனை   தொடர்ந்து  இல்ல  மாணவ  தலைவர்களால்  ஒலிம்பிக்  சுடர்  ஏற்றப்பட்டுமாணவ  தலைவர்களின்  சத்திய பிரமாண  நிகழ்வுகள்  விளையாட்டு  ஆரம்பமானது

இவ் விளையாட்டு  நிகழ்வுகளில்  மாணவர்களின்  ஓட்டப்போட்டி ,மாணவர்களின்   உடற்பயிற்சி  பயிற்சி பெற்றோர்கள் ,ஆசிரியர்கள்  ஆகியோரின்  வினோத  விளையாட்டு  நிகழ்வுகளும்                       நடைபெற்றது .

கல்லூரி இல்ல  விளையாட்டு  போட்டியின்  இறுதி  நிகழ்வாக   வெற்றி பெற்ற  இல்லமாணவர்களுக்கு  பரிசில்களும் சான்றிதழ்களும், வழங்கப்பட்டு விளையாட்டு  நிகழ்ச்சிகள்  சிறப்பாக  நிறைவு  பெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர்கள் , கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , கல்லூரி பழைய மாணவர்கள் என பலர்  கலந்துகொண்டனர்