மட்டக்களப்பு மக்களுக்கான பத்திரிகையாக வெளிவந்தது “அரங்கம்”

கிழக்கு மண் தொடர்பில் எதிர்கால சந்ததிக்கு கொண்டுசெல்லும் வகையில் வெளிவந்துள்ள அரங்கம் பத்திரிகை வழியை ஏற்படுத்தும் என பேராசிரியர் எஸ்.மௌனகுரு தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இருந்து அரங்கம் என்னும் தலைப்பில் வெளிவந்துள்ள வாராந்த பத்திரிகையின் வெளியீட்டு நிகழ்வும் அரங்கம் இணைய வானொலியின் ஆரம்ப நிகழ்வும் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று காலை நடைபெற்றது.

பி.பி.சி. சேவையின் ஊடகவியலாளரும் மட்டக்களப்பினை சேர்ந்தவருமான பூபாலரட்னம் சீவகனின் முயற்சினால் அரங்கம் வார பத்திரிகை வெளிக்கொணரப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தினை மையப்படுத்தியதாகவும் தமிழ் பேசும் மக்களின் கலை,கலாசாரம்,பண்பாடு,அரசியல்,வரலாறு உட்பட பல்வேறு அம்சங்களை தாங்கியவாறு இந்த அரங்கம் வாரப த்திரிகை வெளிவந்துள்ளது.

பெறுதியான ஆக்கங்களுடனும் மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பில் அறியப்படாத பல விடயங்களை தாங்கியவாறு முதல் இதழாக இன்றுவெளிவந்த அரங்கம் பத்திரிகை காணப்படுவதுடன் முற்றிலும் இலவசமான முறையில் இந்த பத்திரிகை விநியோகம் செய்யப்பட்டுவருகின்றது.

கிழக்கு மாகாண மக்களின் மிக நீண்டகால ஏக்கமாக இருந்த வார பத்திரிகையொன்று வெளிவந்துள்ளமை தொடர்பில் வாசகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தின் சிரேஸ்ட உதவி செயலாளர் வி.தவராஜா, பேராசிரியர் எஸ்.மௌனகுரு உட்பட பலர் கலந்துகொண்டனர்.