மட்டக்களப்பு மாவட்டத்தில் 240 கிராமங்கள் போக்குவரத்து சபை பஸ்களை இதுவரை காணவில்லை - வியாழேந்திரன் எம்.பி.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்து சபை பஸ்கள் செல்லாத 240 கிராமங்கள் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் சுட்டிக்காட்டினார்.

நேற்று போக்குவரத்து திருத்த சட்டமூலம் தொடர்பான  பாராளுமன்ற விவாதத்தின் போது தெரிவித்தார் .

நாங்கள் நவீனத்துவம் பற்றி இங்கு பேசுகிறோம்.ஆனால் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் வண்டிகளே போகாத 240 கிராமங்கள் மட்டக்களப்பிலுள்ளன. போக்குவரத்துப் பாதைகள் சீர் செய்யப்படவில்லை. ஆளனிப்பற்றாக்குறையுண்டு. இவ்வாறு பல குறைபாடுகளைச் சுட்டிக்காட்ட முடியும் .

இதனால் பாடசாலை மாணவர்கள் உட்பட பலரும் பாதிக்கப்படுகின்றனர். அடிப்படைப் போக்குவரத்து வசதிகளே அனுபவிக்காத நிலையில் மக்கள் உள்ள போது  நீங்கள் போக்குவரத்து துறையில் நவீனத்துவம் பற்றி பேசுவாது வேடிக்கையானது. றுகைi  என்றீகள் மாணவர்களுக்கு டயிவழி என்றீர்கள். ஒன்றும் நடந்தமாதிரியில்லை.

இவற்றை வழங்க முன் எத்தனையோ பாடசாலைகள் கிராம மட்டங்களில் தகரக் கொட்டிலிலும், ஓலைக் குடிசையிலுமே இயங்குகின்றன . குடிப்பதற்கே சரியான குடிநீர் வசதிகள் இல்லை. பல பிள்ளைகள் பலவிதமான அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.

போக்குவரத்து துறையாகவிருந்தாலும் சரி, கல்வி போன்ற ஏனைய துறைகளாகவிருந்தாலும் சரி முதலில் அடிப்படை பிரச்சினைகளை முதலில் தீருங்கள்.அதன்பின் ஒவ்வொரு துறை சார்ந்து மேற்க்கொள்ளப்பட வேண்டிய நவீனத்துவ முறைகள் பற்றி சிந்திக்கலாம்.

அடிப்படை வசதிகளே இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. இங்கு கொண்டு வரும் சட்டங்கள் சில எழுத்து வடிவிலேயேயுள்ளன. அவை சரியான முறையில் அமுலாக்கப்ப வேண்டும் .அது மொத்தத்தில் நாட்டு மக்களுக்கு நன்மை பயப்பதாக அமைய வேண்டும்.