தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவுள்ள பிரதிநிதிகளுக்கான பயிற்சி

 (லியோன்).

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி அதிகாரசபைக்கான  தேர்தலில் கண்காணிப்பு  பணிகள் ஈடுபடவுள்ள  அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளுக்கான ஒருநாள் பயிற்சி இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது  
   

மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் கண்காணிப்பு அமைப்பின்  பெப்ரல் சார்பாக அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் இணையத்தின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவன தலைமையில் தேர்தல்  கண்காணிப்பு  பணிகள் ஈடுபடும் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளுக்கான ஒருநாள் பயிற்சி மட்டக்களப்பு  சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது .

எதிர்வரும் பெப்ரவரி  10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி அதிகாரசபைக்கான தேர்தலில்  மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்டவுள்ள   240  வாக்களிப்பு நிலையங்களில்  தேர்தல்  கண்காணிப்பு  பணிகள் ஈடுபடும் 240 அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளுக்கான பயிற்சிகளை வழங்குவதற்காக  பெப்ரல் அமைப்பின் வளபகிர்வாளர் ஸ்டேன்லி குமார் வளவாளராக கலந்துகொண்டார்


நடைபெற்ற ஒருநாள் பயிற்சியில் பெப்ரல் அமைப்பின் வெளிக்கள உத்தியோகத்தர்  ஆர் .பாலசுப்பிரமணியம் , அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் இணையத்தலைவர்  எஸ் . சிவயோகநாதன் , கரித்தாஸ் எகெட் நிறுவன இனைப்பாளர் ஐ .கிறிஸ்டி  மற்றும் தேர்தல்  கண்காணிப்பு  பணிகளில்  ஈடுபடும் அரச சார்பற்ற நிறுவனங்களான சர்வோதயம் , சூரியா , இணையம் , கரித்தாஸ் எகெட் , நல்லாட்சிக்கான பெண்கள் அமைப்பு , சமூக மேம்பாட்டு மக்கள் ஒன்றியம்  ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்