புளியந்தீவு திருத்தல வளாகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதான நடவடிக்கை

(லியோன்)


ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக பொலிஸ் திணைக்களத்தினால்   நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டு  வருகின்றன
.

இதன்கீழ் மட்டக்களப்பு பொலிஸ் திணைக்களம் மற்றும் மட்டக்களப்பு கல்லடி 231 பிரிவு இராணுவ கட்டளை தலைமையகத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில்  இந்த  டெங்கு ஒழிப்பு சிரமதான பணி  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன

இதற்கு அமைய மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தீஹா வதுற மற்றும் மட்டக்களப்பு கல்லடி 231 பிரிவு இராணுவ கட்டளை தலைமையக பிரிகேடியர்  எம் .டி .எஸ் .நியு எல்ல ஆகியோரின்  வழிகாட்டலின் கீழ்  மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குவாட்டஸ் வளாக பகுதி ,மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் இல்ல வளாகம்  மற்றும் புளியந்தீவு புனித அந்தோனியார் திருத்தல வளாகம்  ஆகியன துப்பரவு செய்யும் சிரமதான பணிகளும் மற்றும்  ஆலய சுற்று மதிலுக்கான வெள்ளவர்ணம் பூசும் நடவடிக்கைகளும்  முன்னெடுக்கப்பட்டன 


இந்த சிரமதான பணியில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய சமூக தொடர்பாடல் பொலிஸ் அதிகாரி எஸ் ஐ .இலங்கரத்ன தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் ,இராணுவ வீரர்கள் , புளியந்தீவு திருத்தல பொதுநிலையினர் என பலர் கலந்துகொண்டனர் .