தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பிரச்சார கூட்டம் காரைதீவில்.


தமிழ்தேசிய கூட்டமைப்பின் காரைதீவு பிரதேசத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் பிரச்சார கூட்டம் நேற்று புதன்கிழமை மாலை    காரைதீவில்    நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் கே.கோடிஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டதுடன்  இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.