கருவப்பங்கேணி வனத்து அந்தோனியார் ஆலய திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது

(லியோன்)

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின்   கருவப்பங்கேணி  புனித வனத்து அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி   இன்று ஞாயிற்றுக்கிழமை   மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் பங்குதந்தை பிறைனர் செல்லர் ,இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய பங்குதந்தை பேதுரு ஜீவராஜ் ஆகியோர் இணைந்து திருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுத்தனர் .


ஆலய  வருடாந்த திருவிழா பங்குதந்தை பிறைனர் செல்லர்  தலைமையில்   கடந்த   வெள்ளிக்கிழமை மாலை  05.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .  

ஆலய திருவிழா நவ நாட்காலங்களில் தினமும் செபமாலையும்மறைவுரைகளுடன்  திருப்பலிகளும்  இடம்பெற்றது .

சனிக்கிழமை  (27)  மாலை  புனிதரின் திருச்சுருவ பவணியும் அதனை தொடர்ந்து விசேட நற்கருணை வழிபாடுகளும் மறைவுரைகளும்  இடம்பெற்றதுடன்   தொடர்ந்து  விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது   .

இன்று (28)   ஞாயிற்றுக்கிழமை காலை   மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் தலைமையில் திருவிழா  கூட்டுத்திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது  .

ஆலய திருவிழா  ஆரம்ப நிகழ்வாக ஆயரை வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்வில் ஜெயந்திபுரம்  வானம்பாடி கலை கழகத்தினரால்  பேன்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர்  இதனை தொடர்ந்து  விசேட திருவிழா திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது

திருப்பலியை தொடர்ந்து புனிதரின்   திருச்சுருவ  பவணியும்  அதனை தொடர்ந்து  ஆலய  முன்றலில்  திருநாள்  கொடியிறக்கப்பட்டு   புனிதரின் ஆசீர்வாதத்துடன் ஆலய வருடாந்த திருவிழா நிறைவுபெற்றது  .