நர்த்தன பவனம் நாட்டியாலயத்தின் 12வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு நாட்டியக் கலாபம் நர்த்தன பவனம் நாட்டியத்தின் 12வது ஆண்டு நிறைவு விழா நாட்டியக் கலாபம் நர்த்தன பவனம் மாணவர்களின் ஒழுங்கமைப்பில் இயக்குனர் ஸ்ரீமதி . சர்மிலதா பிரபாகரன் தலைமையில் மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது .

ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் கலாலய கீதம் பாடப்பட்டது .இதனை தொடர்ந்து ஆசியுரையுடன் குரு கௌரவிப்பு இடம்பெற்றது

தொடர்ந்து நர்த்தன பவனம் நாட்டியாலயத்தின் 12வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு “ நிருத்தியாமிர்தா “ சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வும் தொடர்ந்து  நாட்டியக் கலாபம் நர்த்தன பவனம் மாணவர்களின் புஷ்பாஞ்சலி , ஆலாரிப்பு ,ஜதிஸ்வரம்  ,பாவை நடனம் , சப்தம்  ,தாலாட்டு , பதம் , வர்ணம் , ஹஸ்த கலாபம் ,புத்தாக்க நடனம் , கீர்த்தனம் , வர்ண ஜாலா நடனம் , தில்லானா , மங்களம் போன்ற நடன நிகழ்வுகளும் , மாணவர்களுக்கான நினைவு சின்னங்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது .


இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு   வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் , மட்டக்களப்பு கல்குடா கல்வி வலய பிரதி கல்விப்பணிப்பாளர் திருமதி .சுஜாதா குலேந்திரன் ,ஓய்வுநிலை வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி , ஓய்வுநிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ .சுகுமாரன் , செங்கலடி மத்திய கல்லூரி அதிபர் .அருணாசலம் , மகாஜன கல்லூரி அதிபர் அருமைராஜா , மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலய அதிபர் கே .ஸ்ரீதரன் மற்றும் நாட்டியக் கலாபம் நர்த்தன பவனம் மாணவர்கள் ,பெற்றோர் என பலர் கலந்துகொண்டனர்