கருவப்பங்கேணி பகுதியில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் முற்றுகை

(லியோன்)

மட்டக்களப்பு  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு கருவப்பங்கேணி பகுதியில்  சட்ட விரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி செய்யும்  இடம் இன்று மட்டக்களப்பு பொலிசாரினால் முற்றுகை செய்யப்பட்டுள்ளது .




மட்டக்களப்பு பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிக்கு  கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில்  மட்டக்களப்பு கருவப்பங்கேணி பகுதிக்கு சென்ற  மட்டக்களப்பு பொலிசார்  கசிப்பு உற்பத்தி செய்யும் வீட்டினை முற்றுகையிட்டுள்ளனர்.


மட்டக்களப்பு  நிலைய பொறுப்பதிகாரி  தீகா வதுற  ஆலோசனையின் கீழ் எஸ் .ஐ . ஜனக சஞ்சீவ தலைமையில்  31582  இலக்க பொலிஸ் சாஜன் திலகரத்ன , 9194  இலக்க பொலிஸ் கொஸ்தாப்பல்  கியான் ,48367   இலக்க பொலிஸ் கொஸ்தாப்பல்  பியதிலக  , 1221  இலக்க பொலிஸ் கொஸ்தாப்பல் ரணசூரிய ,  60901   இலக்க பொலிஸ் கொஸ்தாப்பல் ரணசிங்க  , 78001  இலக்க பொலிஸ் கொஸ்தாப்பல் லக்மால் , 63447  இலக்க பொலிஸ் கொஸ்தாப்பல்  விஜயகோன் ஆகிய  பொலிஸ் குழுவினர் இந்த முற்றுகையினை மேற்கொண்டுள்ளனர்.


இதன்போது கசிப்பு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும்  42  லீற்றர்  கோடா மற்றும் 13 அரை  லீற்றர் கசிப்பு என்பனவற்றையும் மீட்டுள்ளதுடன் கசிப்பு காய்ச்சுவதற்கான பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் மீட்டுள்ளனர்.


குறித்த  முற்றுகையின் போது  கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த  நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தீகா வதுற  தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டுள்ள நபர்  நாளை மட்டக்கப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தெரிவித்தார்.