மாவட்ட செயலக ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய சங்காபிஷேகம்

(லியோன்)

மட்டக்களப்பு  மாவட்ட செயலக ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயயத்தின் ஒருவருட  கும்பாபிஷேக  தின நிறைவினை முன்னிட்டு 108 சங்காபிஷேக பூஜை  நிகழ்வுகள் இன்று மிக சிறப்பாக மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது .


ஆலய பிரதம குரு  சிவஸ்ரீ உத்தம ஜெயதீஸ்வர சர்மா குருக்களின் தலைமையில்  விசேட யாக ஹோமம் பூசைகள்  நடைபெற்று  ஆலய சங்காபிஷேகம் சுபவேளையில் நடைபெற்றது  


இதனை தொடர்ந்து விசேட  அபிசேகம் பூஜைகள் நடைபெற்று பிரதான கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூல மூர்த்தியாகிய விநாயகருக்கு  அபிஷேகம் செய்யப்பட்டது 



இந்த  108 சங்காபிஷேக   விசேட பூஜை நிகழ்வில் மாவட்ட செயலக அலுவலக அதிகாரிகள் ,உத்தியோகத்தர்கள்  கலந்து சிறப்பித்தனர்