இலங்கை இளைஞர்களுக்கு ஒர் அரிய வாய்ப்பு, தவறவிடாதீர்கள்.

(சசி துறையூர்)
இலங்கை இளைஞர்களுக்கு ஒர் அரிய வாய்ப்பு, தவறவிடாதீர்கள்.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு,  மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில்
2018ஆம் ஆண்டுக்கான யொவுன் புரய       இளைஞர் முகாம் (இளைஞர் புரம்/இளைஞர் கிராமம்)  வேலைத்திட்டம் எதிர்வரும் மார்ச் 28,29,30,31 தொடக்கம் ஏப்ரல் முதலாம் திகதி வரை (ஜந்து நாட்கள்) குருநாகல் நிகவரட்டியில் நடைபெறவுள்ளது.

இலங்கை வாழ் அனைத்து இளைஞர் யுவதிகளுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. இளைஞர்கள் தமது ஆளுமை தலைமைத்துவ ஆற்றல்களை விருத்தி செய்வதற்கும் , நமது நாட்டில் உள்ள இரு மொழி பேசும் மூவின இளைஞர் யுவதிகளோடும் தொடர்பாட , நட்புடன் நலுறவு பேண,  இன ஜக்கியத்துடன் சகவாழ்வை கட்டியெழுப்ப , கலை , கலாச்சார, விளையாட்டு போட்டிகளில் பங்குபற்றி பெறுமதியான சான்றிதழ்களையும், பணப்பரிசில்களையும் வெற்றிகொள்வதற்கும் உன்னதமான களம் யொவுன்புரய.

இந்த நிகழ்வில் தொழிற்துறை  உற்பத்தி துறை, விவசாய துறை மற்றும்
கைத்தொழில் துறை சார்ந்த இன்னும் பல கண்காட்சி கூடங்கள்.

வானொலி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை துறைசார் பயன்பாடு மற்றும் பயிற்சி கூடங்கள்.

சிறந்த அறிவீப்பாளர் (ஆண், பெண்) ,
சிறந்த பாடகர் (ஆண், பெண்) ,
நடன, ஆண்அழகன், அழகி, கயிறுழுத்தல், குறுந்தூர மரதன், விவாத போட்டிகள் ,இன்னும் பல கேளிக்கை வினோத விளையாட்டுக்கள், இந் நிகழ்வில் இடம்பெறவுள்ளது.


பங்கு பற்ற விரும்புகின்ற ஆர்வமுடைய 16 வயது தொடக்கம் 29வயதுக்குட்பட்ட இளைஞர்,யுவதிகள்  உங்கள் பிரதேச செயலகங்களுக்கு சென்று பிரதேச  இளைஞர் சேவை அதிகாரியை அல்லது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட காரியாலயங்களுடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ள முடியும்.