மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரி மக்கள் கொக்கட்டிச்சோலை –தாந்தாமலை பிரதான வீதியை இடைமறித்து இன்று புதன்கிழமை காலை மறியல்போராட்டம் ஒன்றை நடாத்தினர்.
இன்று புதன்கிழமை காலை மாவடிமுன்மாரி மக்கள் ஒன்றுதிரண்டு இந்த வீதி மறியில் போராட்டத்தினை மேற்கொண்டனர்.
மாவடிமுன்மாரி பகுதியில் வெளியிடங்களை சேர்ந்தவர்கள் கனரக வாகனங்களில் மண் ஏற்றிச்செல்வதன் காரணமாக கொக்கட்டிச்சோலை –தாந்தாமலை பிரதான வீதி கடுமையான முறையில் சேதமடைந்துவருவதுடன் தமது மண்ணை வேறுபகுதிக்கு கொண்டுசெல்வதும் நிறுத்தப்படவேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
கொக்கட்டிச்சோலை –தாந்தாமலை பிரதான வீதி கனரக வாகனங்கள் சென்றுவருவதன் காரணமாக கடுமையான முறையில் சேதமடைந்துவருவதாகவும் குறித்த பகுதியினால் போக்குவரத்து செய்வோர் நாளாந்தம் பாதிக்கப்படுவதாகவும் குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் கடந்த 18ஆம்திகதியும் வீதி மறியில் போராட்டம் நடாத்திய நிலையில் குறித்த பகுதிக:கு வந்த பட்டிப்பளை பிரதேச செயலாளர் குறித்த மண் கொண்டுசெல்வதை நிறுத்துமாறு கோரியிருந்த நிலையில் நிறுத்தப்பட்டதாகவும் எனினும் இன்று மீண்டும் மண்ஏற்றிச்செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்போது குறித்த பகுதிக்கு வந்த பட்டிப்பளை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜெயசிங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடினார்.
பொதுமக்களின் கோரிக்கைகளை நாளை வியாழக்கிழமை பொதுமக்கள் நேரடியாக மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கனிமவள திணைக்களம் ஆகியவற்றுக்கொண்டுசெல்ல நடவடிக்கையெடுப்பதாகவும் அதற்கு பொதுமக்களில் சிலரையும் பங்குபற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து மறியல் போராட்டம் கைவிப்பட்டதை தொடர்ந்து மறிக்கப்பட்டிருந்த மண் கொண்டுசென்ற கனரக வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்பட்டது.
தமது நியாயமான கோரிக்கையினை உரிய அதிகாரிகள் நிறைவேற்ற தவறுவார்களானால் தாம் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக குறித்த பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இதேநேரம் தாம் முறையான அனுமதிபெற்று ஐந்து ஆறுஇலட்சம் ரூபா பணம் செல்லுத்தி தாங்கள் மண் ஏற்றுவதற்கான அனுமதி பெறப்படும்போது பல்வேறு அதிகாரிகள் அதனைப்பார்வையிட்டே வழங்குவதாகவும் ஆனால் மக்கள் அதற்கு எதிராக போராடுவதனால் தாங்கள் கடுமையான பாதிப்புகளை பொருளாதார ரீதியில் எதிர்கொள்வதாகவும் மண் ஏற்றுவோர் தெரிவிக்கின்றனர்.
தமக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலமைக்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.