(லியோன்)
தமிழர்களின் முக்கிய பண்டிகையான உழவர் திருநாளாம்  தைத்திருநாளை  
உலகெங்கும் உள்ள  உழவர்கள்  மிக சிறப்பாக கொண்டாடி
வருகின்றனர் ..
உழவர்
திருநாளின் இரண்டாம் நாளான இன்று  மாட்டுப்பொங்கல்  விசேட பூஜை வழிபாடுகள் உழவர்களின்  இல்லங்களில்  செய்யப்பட்டு வருகின்றன . 
இதற்கு
அமைய மட்டக்களப்பு புதூர் – திமிலத்தீவில் உள்ள சந்திரன் என்பவருடைய
மாட்டுப்பன்னையில்  விசேட மாட்டுப்பொங்கல் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன
, 
உழுதுண்டு வாழும் தமிழர் பண்பாட்டின் பாரம்பரிய
பண்பாட்டு முறையில் நடைபெற்ற மாட்டுப்பொங்கல் நிகழ்வில் முன்னாள் கிழக்குமாகாண
விவசாய ,கால்நடை  அமைச்சர் கே
.துரைராஜசிங்கம் ,  வீச்சுகல்முனை
அன்னம்மாள் ஆலய பங்கு தந்தை இன்னாசி ஜோசப் ,பொதுசுகாதார பரிசோதகர் மற்றும் சிவில்
சமூக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்  
 
.jpeg) 
