தேசிய இளைஞர் தைப்பொங்கல் விழா மட்டக்களப்பில்.

(சசி துறையூர்) தேசிய  கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், மற்றும் தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தேசிய  பொங்கல் விழா எதிர்வரும் 17.01.2018 புதன் கிழமை  மட்டக்களப்பு ஊறனி கொத்துக்குளம் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய வளாகத்தில் மிக விமர்சையாக நடைபெறவுள்ளது.

விழாவுக்கான ஏற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் தேசிய பொங்கல் விழாவில் பங்குபற்றுவதற்க்காக நாடாளாவிய ரீதியில் இனமத மொழி பேதமின்றி  500 இளைஞர் யுவதிகள் பங்குபற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் 16.01.2018
செவ்வாய்க்கிழமை மாலை  திருப்பெருந்துறைக்கு வருகைதரும்
இளைஞர் யுவதிகள் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளால் கோலாகலமான முறையில் வரவேற்கப்பட்டு, மட்டக்களப்பு நகர்பிரதேசங்களில் உள்ள இளைஞர் யுவதிகளின் வீடுகளில் தங்க வைக்கப்படவுள்ளனர்.

புதன் கிழமை அதிகாலையில் பொங்கல் நிகழ்வுகளுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி, கலை கலாச்சார போட்டிகளுடன் மாலை வேளையில் இசைநிகழ்வுகளும் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.









படத்தில். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமைக்காரியாலய உத்தியோகஷ்தர்கள், மட்டக்களப்பு மாவட்ட அனைத்து பிரதேச செயலகபிரிவுகளினதும் இளைஞர் சேவை அதிகாரிகள், மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள்.