மாணவர்களை சமுகத்திற்கு நற்பிரஜையாக தருவதே எமது பணி. பழுகாமம் வி.வி. அதிபர் ஆ.புட்கரன்

(பழுகாமம் நிருபர்)
எம்மிடம் நீங்கள் ஒப்படைத்த பிள்ளைகள் அனைவரும் எமது பிள்ளைகள். அவர்களை நற்பிரஜைகளாக சமுகத்திற்கு தருவதே  எமது பணி என திருப்பழுகாமம் விபுலானந்த வித்தியாலய அதிபர் இன்று(15) நடைபெற்ற தரம் 01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில்
உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலய கல்விப்பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் கலந்து கொண்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
தரம் 01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வானது மாணவர்களை பாடசாலையை விரும்புவதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றது. இன்றிலிருந்து எம்மிடம் ஒப்படைக்கப்படும் தரம் 01 மாணவர்கள் அனைவரும் எமது மாணவர்கள் தான். அவர்களை சரியான முறையில் நெறிப்படுத்தி, வளப்படுத்தி சமூகத்திற்கு வழங்குவது ஆசிரியர்களாகிய எமது கடமையாகும். ஆரம்பப்பிரிவு பாடசாலை என்றால் பெற்றோர்களின் கவனம் அதிகமாயிருக்கும். ஆனால் பெற்றோர்களாகிய நீங்கள் திடமான நம்பிக்கையும், உறுதியும் கொள்ள வேண்டும். என்னவென்றால் இந்தப்பிள்ளைகளை எம்மிடம் நம்பிக்கையுடன் ஒப்படைத்திருக்கின்றீர்கள். அவர்களை நெறிப்படுத்த ஆற்றலும் நோக்கமும் கொண்டவர்களாக  எமது ஆசிரியர் குழாம் இருக்கின்றார்கள். இந்தப்பாடசாலையூடாக நாம் காட்டக்கூடிய அடைவுமட்டம் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுதான். அதனை கடந்த வருடம் சிறப்பாக காட்டியிருந்தோம். அதே போன்று இந்த மாணவர்களையும் அப்பரீட்சைக்கு தேர்ந்தவர்களாக மாற்ற வேண்டும். இவையனைத்துக்கும் பெற்றோர்களாகிய நீங்களும் ஒத்துழைப்புக்களை நல்க வேண்டும். எனவும் தெரவித்தார்.