17 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நபர் மட்டக்களப்பு பொலிசாரினால் கைது

(லியோன்)    

நாட்டின் பல பாகங்களிலும் உள்ள நீதிமன்றங்களினால் 17 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட இதுவரையில் கைதுசெய்யப்படாத நிலையில் தலைமறைவாகியிருந்த நபர் மட்டக்களப்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.


17  பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த  அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மட்டக்களப்பு பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டிள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவிக்கின்றனர்  .

மட்டக்களப்பு  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு புளியடிகுடா பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில்  நடமாடி திரிந்த சந்தேக நபர் ஒருவரை மட்டக்களப்பு பொலிசாரினால் வியாழக்கிழமை மாலை 05.30 மணியளவில் கைதுசெய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்

மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றவியல் பொலிஸ் பிரிவு  பொறுப்பதிகாரி  ஐ பி பண்டார தலைமையில் எஸ் ஐ  கஜநாயக எ பி எஸ் . 27534  இலக்க  பொலிஸ் கொஸ்தாப்பல்  அதிகாரி ,10705 இலக்க பொலிஸ் கொஸ்தாப்பல் முஸ்தபா . 42811  இலக்க பொலிஸ் கொஸ்தாப்பல்  நியால் , 20743  இலக்க பொலிஸ் கொஸ்தாப்பல் தரங்க , 69023  இலக்க பொலிஸ் கொஸ்தாப்பல் பண்டார ஆகியோர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு பொலிசாரினால் மேற்கொண்ட  விசாரணைகளின்  போது குறித்த நபர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் 17  குற்ற செயலுடன் தொடர்புடையதாக  17  பிடியானைகள் பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வரும் நபரென தெரிய வந்துள்ளது .

குறித்த நபர்  கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒரு குற்ற செயலுடன் தொடர்புடையதாக  ஒரு  வழக்கும் ,44 இலட்சம் மற்றும் 13 இலட்சம் பெறுமதியான இரத்தினக்கல் வியாபார விற்பனையில்  மோசடி செய்ததில் கொழும்பு கோட்டை  பொலிஸ் நிலையத்தில் இரண்டு வழக்குகளும் முச்சக்கரவண்டி வண்டி  விற்பனை செய்து பணம் மோசடி செய்ததாக கெக்கிராவ பொலிஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் . மூன்று இலட்சம் ரூபா தங்க நகைகளை விற்பனை செய்து பணம் மோசடி செய்ததாக மருதானை பொலிஸ் நிலையத்தில் ஒரு வழக்குமாக  தாக்கல்செய்யபட்ட வழக்குகளில் 17 பிடியாணைகள் குறித்த நபர் மீது உத்தரவிடப்பட்டிருந்ததாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பொலிசாரினால் கைதுசெய்யப்பட்ட நபர் 26 ஆம் திகதி  நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 08ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவினை பிறப்பித்தார்.


இதேவேளை குறித்த நபர் தொடர்பான தகவல்கள் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் மட்டக்களப்பு பொலிசார் தெரிவிக்கின்றனர் .