மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்த மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர்

இலங்கை மதுவரித்திணைக்களம் திணைக்களம் மட்டத்தில் நடாத்திய தேசிய விளையாட்டு நிகழ்வில் ஓட்ட போட்டியில் முதல் இடத்தினைப்பெற்று மட்டக்களப்பினை சேர்ந்த உத்தியோகத்தர் சாதனை படைத்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற இந்த விளையாட்டு நிகழ்வில் கல்முனை மதுவரித்திணைக்களத்தின் சார்பில் பங்குபற்றிய மட்டக்களப்பு புளியந்தீவினை செர்ந்த லோகேஸ்வரன் சுபோஸ்குமார் என்னும் மதுவரித்திணைக்கள உத்தியோகத்தரே இந்த சாதனையினை படைத்துள்ளார்.

இவரை கல்முனை மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா உட்பட உத்தியோகத்தர்கள் கௌரவித்துள்ளனர்.

இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர்கள் இந்த விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.