மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டானில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் சத்துருக்கொண்டானி; இந்த விபத்து இடம்பெற்றதுடன் இதன்பொது கூழாவடியை சேர்ந்த இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அங்கு அவர் உயிரிழந்துள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனையில் இருந்து வந்த தனியார் பஸ்சுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞரே மோதி விபத்துக்குள்ளதானதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பசும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.