மட்டக்களப்பு நகரில் அதிகளவான பிரச்சினைகளுடன் மக்கள் வாழ்கின்றனர் –ஊடகவியலாளர் உதயகாந்த்

படுவான்கரை பகுதி மக்களை விட மட்டக்களப்பு நகரிலேயே அதிகளவான பிரச்சினைகளுடன் மக்கள் வாழ்வதாக மட்;டக்களப்பு மாநகரசபைக்கு சுயேட்சைக்குழு 05இல் போட்டியிடும் தலைமை வேட்பாளரும் ஊடகவியலாளருமான உ.உதயகாந்த் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபையில் சுயேட்சைக்குழு 05இல் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினை சந்தித்து ஆசிபெற்றதை தொடர்ந்து தமது தேர்தல் பிரசாரரத்தினை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு மாநகரசபையின் தலைமை வேட்பாளரான ஊடகவியலாளர் உ.உதயகாந்த் தலைமையில் சுயேட்சைக்குழுவாக போட்டியிடுகின்றது.

இளைஞர்; யுவதிகள் தேர்தலுக்கு வருவதை தான் வரவேற்பதாகவும் நேர்மையுடனும் உண்மையுடனும் செயற்படுமாறும் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை இங்கு தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு கல்லடி இராம கிருஸ்ண மிசனுக்கு சென்று சுவாமி பிரபுபிரபானந்தஜியிடமும் ஆசிபெற்ற வேட்பாளர்கள் தமது பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.

அதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்கும் உ.உதயகாந்த்  மற்றும் வேட்பாளரும் ஊடகவியலாளருமான பு.சிசிகரன் ஆகியோர் கருத்து தெரிpவத்தார்.

இங்கு கருத்து தெரிவித்த தலைமை வேட்பாளர் உ.உதயகாந்த்,
மட்டக்களப்பு மாநகரசபையினை வெற்றிகொண்டு ஊழல் அற்ற மாநகரை கைப்பற்றுவோம்.இந்த உறுதிமொழியை நாங்கள் மக்களுக்கு வழங்குகின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் பல்வேறுபட்ட அரசியல்வாதிகள் இருந்தபோதிலும் மக்களுக்கான பல தேவைகளை ஊடகவியலாளர்களாகிய நாங்கள் நிறைவேற்றி வழங்கியிருந்தோம்.

நாங்கள் கூடுதலாக படுவான்கரையினை மையப்படுத்தியே எங்களது ஊடகப்பணியை மேற்கொண்டிருந்தோம்.ஆனால் இன்று பார்த்தால் படுவான்கரை பகுதி மக்களை விட மட்டக்களப்பு நகரிலேயே அதிகளவான பிரச்சினைகளுடன் மக்கள் வாழ்கின்றனர்.

சிலவேலைத்திட்டங்களை நாங்கள் தற்போது முன்னெடுத்துள்ளோம்.மட்டக்களப்ப மாநகரசபையினை வெல்வதற்கு முன்பாகவே பணிகளை செய்வதற்கு நாங்கள் முன்னிற்கின்றோம்.மட்டக்களப்பு நகர்ப்பகுதியிலேயே மக்களுக்கான தேவைப்பாடுகள் அதிகளவில் காணப்படுகின்றன.

மக்கள் எங்களுக்கான வெற்றிவாய்ப்பினை வழங்கும்போது மக்களுக்கான தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் மக்களோடு மக்களாக முன்னிற்போம்.