மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினைப்பெற்ற புனித மைக்கேல் கல்லூரி

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி வெளியாகியுள்ள உயர்தரப்பரீட்சைகளின் அடிப்படையில் மாவட்டத்தில் முதல் இடத்தினைப்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா தெரிவித்தார்.

வெளியாகியுள்ள உயர்தரப்பரீட்சைகளின் பெபேற்றின் அடிப்படையில் 10 மாணவர்கள் பொறியியல் துறைக்கும் 05மாணவர்கள் மருத்துவ துறைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் இவற்றில் கணிதப்பிரிவிலும் விஞ்ஞானப்பிரிவிலும் ஏனைய பாட விதானப்பிரிவிலும் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவர்கள் மாவட்டத்தில் முதல் நிலையினைப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து கணிததுறையின் வளர்ச்சிக்கு பங்காற்றவிரும்புவதாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கனித பிரிவில் முதல் இடத்தினைப்பெற்றுக்கொண்ட மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவனான சிவா விதுசனன் தெரிவித்தார்.

கடின உழைப்பினை கல்வியில் வெளிப்படுத்துவதன் மூலம் சிறந்த அறுவடையினை நாங்கள் பெற்றுக்கொள்ளமுடியும் என விஞ்ஞான துறையில் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் தோற்றி மாவட்டத்தில் முதல் இடத்தினைப்பெற்றுக்கொண்ட இராஜன் திபிகரன் தெரிவித்தார்.

வித்தியாசமான தெரிவுகளை மாணவர்கள் தேர்வு செய்வதன் மூலம் சிறந்த அடைவுகளைப்பெற்றுக்கொள்ளமுடியும் என ஏனைய துறைகளைக்கொண்ட பாட விதானத்தில் தோற்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினைப்பெற்றுக்கொண்ட மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் யோகேந்திரன் தனுஷாந்த் தெரிவித்தார்.

இன்று பாடசாலைக்கு விஜயம் செய்த முன்னாள் மண்முனை வடக்கு கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஏ.சுகுமாரனும் மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.