வண்ணத்துப்பூச்சி சிறார்களின் சந்திப்பு

எமது மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவட்டச்செயலாளராக புதிதாக பதிவியேற்ற மா.உதயகுமார் (மாவட்டச்செயலாளர் ) அவர்களை வண்ணத்துப்பூச்சி சமாதானப்பூங்காவின் தற்கால 6 மாத நிகழ்வில் பங்குபற்றிக்கொண்டிருக்கும் மட் இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயச்சிறார்களும், பூங்காவின் சிறப்பு பயிற்சி வகுப்பில் பங்கு பெறும் மட்டு சிறார்களும் இலகுபடுத்துனர்களும் கடந்த 09.12.2017 சனிக்கிழமைஅவருடைய அலுவலகத்திற்குச்சென்று உரையாடி வாழத்துக்களைத்தெரிவித்தனர்.

மாவட்டச்செயலாளர் அவர்களும் இச்சிறார்களுக்காக தனது நேரத்தை ஒதுக்கி அவர்களது வாழ்க்கை முன்னேற்றம் சம்மந்தமான கருத்துக்களைப்பரிமாறினார்.

கருத்துச்சுதந்திரமென்பதும் சிறார்களின் உரிமை என்ற ரீதியில் சிறார்களும் தமது கருத்துக்களையும் கனவுகளையும் அவருடன் பகிர்ந்துகொண்டனர்.