மட்டக்களப்பு பறங்கியர் சங்கத்தின் கலாசார நிகழ்வு

(லியோன்)


கிறிஸ்து  பிறப்பு  விழாவை  முன்னிட்டு   மட்டக்களப்பு  பறங்கியர் சங்கத்தின் கலாசார  நிகழ்வு   மட்டக்களப்பில்   இடம்பெற்றது 


மட்டக்களப்பு  பறங்கியர் சங்கத்தினால்  வருடாந்தம்  நடாத்தப்படும் கலாசார ஒளிவிழா  நிகழ்வு    பறங்கியர்    சங்க  தலைவர்   டெரென்ஸ் செல்லர்  தலைமையில்  இன்று மாலை  மட்டக்களப்பு   சின்ன உப்போடை பறங்கியர் கலாசார  மண்டபத்தில்  இடம்பெற்றது .

ஆரம்ப  நிகழ்வாக   சிறுவர்களினால்   நிகழ்வுக்கு  வருகை  தந்த  அதிதிகளை   மலர் செண்டு வழங்கி  அழைத்து   வரப்பட்டனர் .

அதனை  தொடர்ந்து   இறைவணக்கத்துடன்  பறங்கியர்  சங்கத்தினால்               வருடாந்தம்  நடாத்தப்படும்  கலாசார  ஒளிவிழா கலை  நிகழ்வுகள்           இடம்பெற்றது .

ஒளிவிழா  நிகழ்வில்    பிரதம  விருந்தினராக   அருட்தந்தை வின்ஸ்டன் ரோசைரோ  மற்றும்   ஒளிவிழா நிகழ்வுக்கு  வருகை தந்த   அம்பாறை ,மட்டக்களப்பு கல்முனை  ஆகிய பகுதிகளை சேர்ந்த  சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .


இடம்பெற்ற ஒளிவிழா நிகழ்வில் பறங்கியர் பாரம்பரிய கலாசாரத்தை                பிரதிபலிக்கும்  நடன நிகழ்வுகளும்   கலாச்சார மொழியிலான பாடல்களும்   இடம்பெற்றதுடன்  ,கலாசார நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்களுக்கு பரிசில்களும்,  
கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு   பறங்கியர் சங்க உறுப்பினர்களின் விதவை பெண்களுக்கான  வருடாந்தம்  வழங்கப்படும் கொடுப்பனவுகளும்   வழங்கிவைக்கப்பட்டது.