குருக்கள்மடம் கிருஷ்ணன் ஆலயத்தில் க.பொ.த(சா/த) மாணவர்களுக்கு சிறப்பு பூஜை

(சரன்)
மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் இந்த ஆண்டு க.பொ.த(சா/த) பரீட்சை எழுத இருக்கும் மாணவர்களின் நலன் கருதி குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தில் நேற்று காலை 8.30மணிக்கு சிறப்பு பூஜை வழிபாடு இடம் பெற்றது.

இதில் இந்த வருடம் பரீட்சை எழுதும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களும் வருகை தந்து இருந்தனர்.பூஜை நிகழ்வில் மாணவர்களுக்கு சிறப்பு அர்ச்சனை இடம்பெற்றதுடன் பூஜை நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு திருவருள் சங்கத்தின் ஏற்ப்பாட்டால் பென்கள் வழங்கப்பட்டது.