வவுணதீவு சம்மேளன தலைவர் மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய சம்மேளன பிரதிநிதியாக தெரிவு.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதான தொண்டர் அமைப்பான இலங்கை தேசிய இளைர் கழக சம்மேளனத்திற்க்கு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதிநிதித்துவம் தெரிவு.

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொத்தியாபுலை செழுஞ்சுடர் இளைஞர் கழகத்தின் அமைப்பாளரும் , மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கழகங்களின் சம்மேளன தொழிற் முயற்சி மற்றும் பயிற்சிப்பிரிவின் செயலாளருமான,  மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவருமான செல்வன் தவராசா விமல்ராஷ்  தேசிய சம்மேளன பிரதி நிதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய பிரதிநிதிகள் தெரிவு செய்வதற்க்கான கூட்டம் நேற்று திங்கட்கிழமை 11.12.2017 மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் இடம் பெற்றது.

இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர், மாவட்ட இளைஞர்சேவை அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளினதும் இளைஞர் சேவை அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மட்டக்களப்பு  மாவட்ட  பிரதேச சம்மேளனங்களினுடைய நிறைவேற்றுகுழு நிருவாகிகள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தெரிவு செய்யப்பட்ட இந்த பிரதிநிதித்துவம் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு தேசிய ரீதியாகவும் மட்டக்களப்பு மாவட்ட  ரீதியானதுமான இளைஞர் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.