டெங்கு அற்ற பாடசாலைகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

(லியோன்)

டெங்கு அற்ற  பாடசாலைகளாக தெரிவு செய்யப்பட பாடசாலைகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி  அலுவலகத்தில் நடைபெற்றது
.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் 44 பாடசாலைகளுக்கிடையில்  டெங்கு அற்ற பாடசாலைகளுக்கான நடத்தப்பட்ட முதல் கட்டமாக  போட்டிகளில் டெங்கு அற்ற   பாடசாலைகளாக 9 பாடசாலைகள் தெரிவிசெய்யப்பட்டன

இதில் தெரிவு செய்யப்பட பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டிகளில் டெங்கு அற்ற பாடசாலைகளாக தெரிவு செய்யப்பட முதல் மூன்று பாடசாலைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில்  சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே .கிரிசுதன் தலைமையில் நடைபெற்றது           

இதில் முதல் இடத்தினை மட்டக்களப்பு கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலம்,, இரண்டாம் இடத்தினை ஊரணி சரஸ்வதி வித்தியாலயம் , மூன்றாம் இடத்தினை கல்லடி வேலூர் சக்தி வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன


இந்நிகழ்வில் பொதுசுகாதார பரிசோதகர்கள் , பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் கலந்துகொண்டனர்