அதிபர்கள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சேவை நலன் பாராட்டு

(லியோன்)

மண்முனை வடக்கு கல்விக்கோட்டத்தில் அதிபர்களாகவும் கோட்டக்கல்விப் பணிப்பாளராகவும் கடமை புரித்தவர்களின் சேவை நலன் பாராட்டு  வைபவம்  இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது


மட்டக்களப்பு மண்முனை வடக்கு கல்வி கோட்டம் அதிபர்கள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு கல்விக்கோட்டத்தில் சேவையாற்றி ஓய்வுபெற்று செல்லும் அதிபர்கள் மற்றும் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஆகியோரின் சேவை நலனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு  மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி அதிபரரம்  மண்முனை வடக்கு  கோட்டக்கல்வி அதிபர்கள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர்  ஜே ஆர் பி விமல்ராஜ் தலைமையில் மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில்   நடைபெற்றது . 

நடைபெற்ற சேவை நலன் பாராட்டு  வைபவத்தில்  ஒய்வு பெற்று செல்லும் அதிபர்களான திருமதி .ஆர் .கனகசிங்கம் ,கே .மனோராஜ் ,டி .தாமோதரம் பிள்ளை மற்றும் ,கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ சுகுமாரன் ஆகியோர்  பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டு  நினைவு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது .


இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக  மட்டக்களப்பு  வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் மற்றும் மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ அருள்பிரகாசம்  , கல்வி வலய திட்டமிடல் பிரதி கல்விப் பணிப்பாளர் எஸ் எம் . ஐதரலி மற்றும் மட்டக்களப்பு மண்முனை வடக்கு கல்வி கோட்டம் பாடசாலைகளின் அதிபர்கள் கலந்துகொண்டனர்