கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் (நேரலை)

ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தின் வைரவிழா நிகழ்வு

 (லியோன்)


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தின் 60 ஆண்டுகள் நிறைவினை  முன்னிட்டு வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் ,மாமங்கை நூல் வெளியீட்டு விழாவும் வித்தியாலய அதிபர் வி .முருகதாஸ்  தலைமையில்  (09)  பாடசாலை  பிரதான மண்டபத்தில் நடைபெற்றது 

இடம்பெற்ற பாடசாலை  பரிசளிப்பு நிகழ்வில் மாணவர்களின்  கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட பரீட்சைகளில்  சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு  பரிசில்களும் , சான்றிதழ்களும் வழங்கப்பட்டது .

இதேவேளை வித்தியாலயத்தின் 60வது ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் கௌரவிக்கப்பட்டு நினைவு சின்னங்களும் வழங்கப்பட்டது .


வைரவிழா நிகழ்வு நிகழ்வில்  மண்முனை வடக்கு கோட்டகல்விப் பணிப்பாளர்  கே .அருள்பிரகாசம் , ஒய்வு நிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ. சுகுமாரன், மட்டக்களப்பு  கல்வி வலய திட்டமிடல் பிரதி கல்விப் பணிப்பாளர் எஸ் எம் . ஐதரலி  மற்றம் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள் ,மதத்தலைவர்கள் ,கிராம சேவை உத்தியோகத்தர் ,ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர் , கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்