கமநல அமைப்புக்களின் சிதமு மகளிர் கமக்கார பயனாளிகளின் சிறுவர் சித்திர போட்டி

(லியோன்)

உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் 2016-2018  வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கை மேம்பாட்டுக் கருத்திட்டத்தின் மகளிர் கமக்கார அமைப்புக்களின் பயனாளிகளின் பிள்ளைகளுக்கு நடத்தப்பட்ட  சிறுவர் சித்திர போட்டியில் வெற்றிபெற்ற பிள்ளைகளுக்கு சான்றிதழ்களும் பணப்பரிசும்  வழங்கும் நிகழ்வு  மட்டக்களப்பில் நடைபெற்றது


மட்டக்களப்பு மாவட்ட கமநல திணைக்களத்தின் கீழ் இயங்கும் 17 கமநல அமைப்புக்களின்  சிதமு மகளிர் கமக்கார அமைப்புக்களின் பயனாளிகளின் பிள்ளைகளுக்கு நடத்தப்பட்ட சிறுவர் சித்திர போட்டியில்  வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பணப்பரிசும் போட்டி நிகழ்வில் கலந்துகொண்ட  மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் , கற்றல் உபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு  மாவட்ட  கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் எந்திரி என் .சிவலிங்கம் தலைமையில் இன்று பிற்பகல் மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில்  நடைபெற்றது .

அனைத்து சிதமு மகளிர் கமக்கார அமைப்புக்களின் பொருட்டு மாதாந்தம் ஒரு நாள் வேலைத்திட்டம் ஒன்றினையும் செயற்படுத்தல்  நிகழ்வின் ஜூலை மாதம் 20.07.2017   மலாலா யூசுப் நினைவுத் தினத்திற்கு அனுசரணையாக  கமநல சேவைகள் நிலையம் மட்டத்தில் நடாத்தப்பட்ட சிறுவர் சித்திரப் போட்டியில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற மாணவர்களுக்காக  இன்று நடத்தப்பட்ட  மாவட்ட மட்ட சிறுவர்  சித்திரப் போட்டி நிகழ்வில் அதிதியாக மட்டக்களப்பு மகாஜன கல்லூரி பிரதி அதிபர் ஐ இலங்கேஸ்வரன் , நடுவர்களாக  மட்டக்களப்பு கல்வி வலயம் மற்றும் பட்டிருப்பு கல்வி வலய சித்திரப்பாட ஆசிரியர் ஆலோசகர்கள் கலந்துகொண்டனர் .

இந்நிகழ்வில் மகளிர் கமக்கார அமைப்புக்களின் உறுப்பினர்கள் ,பயனாளிகளின் பிள்ளைகள் , மாவட்ட  கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்