முல்லைத்தீவில் மாபெரும் தொழிற்சந்தை இலவச பேருந்துகள் ஏற்பாடு!

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துடன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், பெரெண்டினா நிறுவனம், வேல்ட் விசன் நிறுவனம் என்பன ஏற்பாடு செய்துள்ள ”முல்லை விடியல்–2” மாபெரும் தொழிற்சந்தை எதிர்வரும் சனிக்கிழமை காலை 09.00 மணிமுதல் பி.ப 01.00 மணிவரை ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த தொழிற்சந்தைக்காக விசேட பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதன் படி குறித்த தினத்தன்று (சனிக்கிழமை) காலை 07.30 மணிக்கு கெப்பிட்டிகொல்லவை சாலைக்கு சொந்தமான அரச பேருந்து வெலிஓயா பிரதேசசெயலகத்திலிருந்து நெடுங்கேணி வழியாகவும், அதே நேரத்தில் தனியார் பேருந்தொன்று மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திலிருந்து பாலிநகர், மாங்குளம் வழியாக ஒட்டுசுட்டானுக்கும் புறப்படவிருக்கின்றன.

மேலும், காலை 06.30 க்கு முல்லைத்தீவு சாலைக்குச் சொந்தமான அரச பேருந்தும், காலை 07.30 மணிக்கு தனியார் பேருந்தும் துணுக்காய் பிரதேச செயலகத்திலிருந்து மாங்குளம் வழியாக ஒட்டுசுட்டானுக்கும் புறப்படவிருக்கின்றன.

இதேவேளை உரிய வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளைஞர் யுவதிகள் இப்பேருந்து சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என முல்லைத்தீவு  மாவட்ட இளைஞர் சேவை அலுவலர் எமது மட்டு நியூஸ் இணையத்தள செய்தி பிரிவுக்கு தகவல் வழங்கினார்.