News Update :
Home » » மட்டக்களப்பின் இனமுறுகளுக்கு பொலிஸாரும் முன்னாள் முதலமைச்சருமே காரணம் -குற்றஞ்சாட்டுகின்றார் யோகேஸ்வரன் எம்.பி.

மட்டக்களப்பின் இனமுறுகளுக்கு பொலிஸாரும் முன்னாள் முதலமைச்சருமே காரணம் -குற்றஞ்சாட்டுகின்றார் யோகேஸ்வரன் எம்.பி.

Penulis : kirishnakumar on Friday, November 3, 2017 | 3:21 AM

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் இனமுரண்பாடுகளுக்கு வாழைச்சேனை பொலிஸாரும் முன்னாள் முதலமைச்சருமே முழுப்பொறுப்பாகும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்புகல்லடி முகாத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று வியாழக்கிழமை பிற்பகல் சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலை அதிபர் தே.இளங்கோ தலைமையில் நடைபெற்ற இந்த பரிசளிப்பு விழாவில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மண்முனை வடக்கு கோட்டக்கல்விக்கல்விப்பணிப்பாளர் க.அருட்பிரகாசம் கலந்துகொண்டதுடன் முன்னாள் அதிபர்கள்;,ஓய்வுநிலை அதிபர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது பாடசாலையில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் ஓய்வுபெற்ற அதிபர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த பரிசளிப்பு நிகழ்வன்போது நடைபெற்ற மாணவர்களின் கலை நிகழ்வுகள் அனைவரையும் கவரும் வண்ணமாக இருந்தன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,

கடந்த சில நாட்களாக மட்டக்களப்ப மாவட்டத்தின் சில பகுதிகளில் இனமுறுகல் தோன்றியுள்ளதாக கூறுகின்றார்கள்.அது ஏன்,எப்படி வந்தது என்று பலருக்கு தெரியாது.

ஒரு சம்பவம் இடம்பெறும்போது அந்த சம்பவத்துடன் தொடர்புபடுகின்றவர்கள் தப்பித்துவிடுகின்றனர் அப்பாவிகள் பாதிக்கப்படுகின்றனர்.அப்பாவிகள் பாதிக்கப்படுவதற்கு நாங்கள் இடமளிக்கமுடியாது.அவர் எந்த இனத்தை சேர்ந்தவர் என்றாலும் அவர்களுக்கு துன்பம் ஏற்படுத்தப்படக்கூடாது.

சில தினங்களுக்கு முன்னர் வாழைச்சேனையில்யில் பஸ்தரிப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.கோறளைப்பற்று பிரதேசம் என்பது தமிழ் மக்களின் பிரதேசமாக காணப்படுகின்றது.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள பிரதான வீதி கறுவாக்கேணி கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்டது.அப்பகுதியில் எந்த முஸ்லிம்களும் இல்லை.அவ்விடத்தில் இருந்து பல பகுதிகளுக்கு செல்வோர் பஸ்சுக்காக காத்திருப்பார்கள்.அவர்களுக்கு அவ்விடத்தில் பஸ்தரிப்பிடம் ஒன்று தேவையாகவிருந்தது.

இந்த இடத்தில் பஸ் நிலையம் அமைக்கப்படுவதன் அவசியம் தொடர்பில் பலதடவைகள் எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.அதன் நிமித்தம் எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து இரண்டு இலட்சம் ரூபாவினை அதற்காக ஒதுக்கியிருந்தேன்.அந்த பஸ்நிலையத்தினை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கையினை பிரதேச செயலகம் மேற்கொண்டது.வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் குறித்த பகுதி குறிக்கப்பட்டு அவர்களின் அனுமதியும் பெறப்பட்டது.

அனைத்து தரப்பினரும் அனுமதியும் பெறப்பட்டு சட்ட ர|Pதியாக சரியான இடமாக இனங்காணப்பட்டு அதில் பஸ் நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டு கல் நடுவதற்காக எனையும் அழைத்திருந்தனர்.நான் சென்று கல்லையும் நட்டேன்.

நான் கல்நட்டு மறுதினம் அங்கு சென்று முச்சக்கர வண்டியோடும் சில முஸ்லிம் சகோதரர்கள் நான் கல்வைத்த பகுதியை மூடிவிட்டு அதற்கு மேல் தங்களது முச்சக்கரவண்டிகளை நிறுத்தியிருந்தார்கள்.இது சட்ட விரோதமான செயற்பாடாகும்.பஸ்தரிப்பிடத்திற்குரிய இடத்தினை முச்சக்கரவண்டி தரிப்பிடமாக பயன்படுத்திவருகின்றனர்,பாராளுமன்ற உறுப்பினர் கல் வைத்ததை முடியுள்ளனர்.

இந்த நிலையில் அன்று காலை சென்றுள்ள அப்பகுதி தமிழ் மக்களும் தமிழ் இளைஞர்களும் அவ்விடத்தில் பஸ் நிலையம் கட்டவேண்டும்.அங்கிருந்து விலகுங்கள் என்று கூறியுள்ளனர்.எனினும் அதற்கு அவர்கள் இடமளிக்கவில்லை.அதன் காரணமாகவே அவ்விடத்தில் பஸ்தரிப்பு நிலையம் கட்டப்படவேண்டும் என்பதற்காக அவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்தினர்.

அந்தநாளில் வாழைச்சேனையில் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம.அதில் இணைத்தலைமையாக நான் இருக்கின்றேன்.பிரதிமைச்சர் அமீர்அலியும் இணைத்தலைமையாக இருக்கின்றார்.அன்றைய தினம் குறித்த கூட்டத்தில் வாழைச்சேனை பஸ்தரிப்பிட நிலைமையினை ஆராய்ந்து பஸ்தரிப்பு நிலையத்திற்கு கல் வைத்த இடம் அது பஸ்தரிப்பு நிலையத்திற்குரியது.அங்கு கல்வைத்ததை மூடி அதற்கு மேலாக முச்சக்கர வண்டிகளை நிறுத்தியவர்களுக்கு எதிராக உடனடியாக சென்று சட்ட நடவடிக்கையெடுக்குமாறு தீர்மானம் எடுத்து அதனை பொலிஸாருக்கு வாழைச்சேனை வழங்கினோம்.அவர்களை அவ்விடத்தில் இருந்துவெளியேற்ற நடவடிக்கையெடுக்குமாறு கூறியிருந்தோம்.

அதனை ஏற்றுக்கொண்டுசென்ற பொலிஸார் அது தொடர்பான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.பொருத்தமற்ற இடத்தில் முச்சக்கர வண்டிகள் நிறுத்தப்படுவதை தடுத்து அங்கிருந்து அவர்கள் அகற்றப்பட்டிருந்தால் இன்று ஏற்பட்டுள்ள நிலையேற்பட்டிருக்காது.

முச்சக்கர வண்டிகளை நிறுத்தியிருந்த அந்த முஸ்லிம் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவேண்டும்.ஆனால் அதனை பொலிஸார் செய்யவில்லை.இது பொலிஸார் செய்த பாரிய பிழையான நடவடிக்கை.போக்குவரத்து சட்டத்தின் கீழ் நடவடிக்கையெடுக்குமாறு கோரியிருந்தோம் ஆனால் அவர்கள் அதனை பிரயோகிக்கவில்லை.

வாழைச்சேனை பொலிஸ் நிலையம் ஒரு இனரீதியாக செயற்பட்டதன் காரணமாக முஸ்லிம் இனத்திற்கு ஆதரவாக செயற்பட்டதன் காரணமாக அந்த பிரச்சினை பெரிதாக மாற்றம்பெற்றுள்ளது.பொலிஸார் அந்த பிரச்சினையை முச்சக்கர வண்டி தரிப்பிட பிரச்சினையாக மாற்றி திரவுபடுத்தியுள்ளனர்.

முச்சக்கர வண்டி தரிப்பிடம் தொடர்பிலும் வாழைச்சேனை அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.முன்னாள் முதலமைச்சர் முதலமைச்சராக இருக்கும்போது அந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.அந்த பிரதேசம் தமிழர்களுக்கு உரியது.அதுதமிழ் மக்களுக்க தேவையான பகுதி.ஏற்கனவே ஆறு இடங்களுக்கு மேல் முச்சக்கர வண்டி தரிப்பிடங்கள் உள்ளது.அனைத்திலும் முஸ்லிம் முச்சக்கர வண்டி சாரதிகள் பயன்படுத்துவதனால் இந்த பகுதியை தமிழ் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு ஒதுக்கவேண்டும் என வாழைச்சேனை பிரதேசசபை செயலாளருக்கு வாழைச்சேனை பிரதேச அபிவிருத்திக்குழு உத்தரவிட்டது.அதனை பிரதேசசபை செயலாளரும் உறுதிப்படுத்தியிருந்தார்.

ஆனால் அதனை வாழைச்சேனை பிரதேசசபை செயலாளர் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்றபோது அதற்கொரு குழுவினை அமைத்து அவர் தேவையற்ற விடயத்தினை கையாண்ட காரணத்தினால்தான் அந்த முச்சக்கரவண்டி தரிப்பிட பிரச்சினையும் புதாகரமாக எழுத்தது.பொலிஸார் சரியான முறையில் அணுகியிருந்தால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது.

இந்த பிரச்சினைகள் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் அவர்களை சார்ந்தவர்களும் சரியானமுறையில் செயற்படவில்லை.சட்டத்தினை அவர்கள் சரியானமுறையில் கையாளவில்லை.ஒரு இனம்சார்ந்து செயற்பட்டுள்ளனர்.தேவையற்ற விடயங்களையும் முரண்பாடான கருத்துகளையும் எழுதி நீதிமன்றுக்கு வழங்கியுள்ளனர்.அதனால் அங்கு மேற்கொள்ளப்பட்ட பணிகளை அங்கிருந்து அகற்றுமாறு நீதிமன்றினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதன் பின்னரே முறுகல்நிலைகள் ஏற்பட்டது.

இந்த முறுகல் நிலைகளுக்கு மூலகாரணம் பொலிஸ் பகுதியினரும் முன்னாள் முதலமைச்சர் நசீர் அகமட் ஆகியோர் என்பதனை ஆணித்தரமாக கூறவிரும்புகின்றேன்.இவர்கள் குறுகிய அரசியல் இலாபம் கருதி இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

இதுவரைக்கும் சட்ட விரோதமாக குறித்த இடத்தில் முச்சக்கர வண்டி நிறுத்தப்படுவதற்கும் பாராளுமன்ற உறுப்பினர் கல் வைத்ததை மூடியமைக்கும் குறித்த முஸ்லிம் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு எதிராக பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அவர்களை சட்டத்தின் முன் கொண்டுசெல்லவில்லை.மட்டக்களப்பில் பொலிஸார் பாரபட்சமாக செயற்படுகின்றனர்.மட்டக்களப்ப பிரதிப்பொலிஸ்மா அதிபர் கூட இதனை நிறுத்துங்கள் என்றே கூறினாரே தவிர அதற்கு எதிராக சரியான சட்டத்தினை நடைமுறைப்படுத்த முன்வரவில்லை.

சில பொலிஸ் பொறுப்பதிகாரிகள் நியாயமான முறையில் நடக்கின்றபோதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல பொலிஸ் நிலையங்கள் பாரபட்சமாகவே செயற்படுகின்றன.உயர் அதிகாரிகள் கூட பாரபட்சமாக செயற்படுகின்றனர்.இதுவே இந்த மாவட்;டத்தில் இனமுரண்பாடுகள் ஏற்படுவதற்கான காரணமாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட தினங்களில் ஆலயங்களுக்கு செல்வதற்கோ தேவாலயங்களுக்கு செல்வதற்கோ விசேட பண்டிகை காலத்திலையோ தலைக்கவசம் இல்லாமல் தமிழர்கள் சென்றால் உடனடியாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.ஆனால் வெள்ளிக்கிழமைகளிலோ நோன்பு காலங்களிலோ காத்தான்குடியிலேயோ ஏறா{ரிலையோ ஓட்டமாவடியிலேயொ அந்த சட்டங்கள் பயன்படுத்தப்படுவதில்லை.

இலங்கையில் அவர்களுக்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டமில்லை.முஸ்லிம் அரசியல்வாதிகளுக்க பயந்து பொலிஸார் தங்களது கடமைகளில் இருந்துதவறுகின்றனர்.பொலிஸார் இவ்வாறு கடமை தவறுவதை நான் பொலிஸ் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுசெல்ல இருக்கின்றேன்.இது தொடர்பாக பாராளுமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டுசெல்லவுள்ளேன்.சட்டமும் நீதியும் இங்கு நிலைநிறுத்தப்படவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் 75வீதமாக இருந்தும் நாங்கள் புறக்கணிக்கப்பட்டுவருகின்றோம்.மக்களின் ஆணையைப்பெற்றுவந்த எங்களது கருத்திற்கு கூட கவனம் செலுத்தாமல் முஸ்லிம் அரசியல்வாதிகளின் கருத்துகளுக்கே பொலிஸார் முக்கியத்துவமளிக்கின்றனர்.

இதுமாற்றம்பெறவேண்டும். 75வீதமாக இருக்கின்ற எமது மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும்.இதுசார்பாக நாங்கள் பல நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்.

போதைவஸ்து விற்பனை செய்பவர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் மட்டக்களப்பில் பொலிஸார் செய்துவருகின்றனர்.சட்டங்கள் சரியானமுறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தற்போது மட்;டக்களப்பில் உள்ள பள்ளிவாயல்களும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் பிரச்சினையொன்று வந்துள்ளதாக கொதித்தெழுகின்றவர்கள் இந்த பிரச்சினைகளுக்கு மூலகாரணமாக இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் கல்வைத்ததை மூடிய குறித்த முஸ்லிம் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கையெடுங்கள் என்று பொலிஸாரை ஏன் கேட்கவில்லையென நாங்கள் இங்கு கேள்வியெழுப்ப விரும்புகின்றேன்.

தற்போதுள்ள அரசியல் தீர்விலும் நாங்கள் இதனால்தான் நியாயமான தீர்வு கிடைக்கவேண்டும் என்று கோருகின்றோம்.காணி பொலிஸ் அதிகாரங்கள் மாகாணத்திற்கு வரும்போது எங்களது மக்கள் அதில் அங்கம் வகிப்பார்கள்.பொலிஸ் நிர்வாகத்தில் அதிகளவில் தமிழர்கள் இருக்கும் நிலையிருக்கும்.பாரபட்சங்கள் நீக்கப்படுவதற்கு சந்தர்ப்பம் உள்ளது.
இதனால்தான் வடக்கு கிழக்கு இணைந்திருக்கவேண்டும்.இணைந்த தாயகத்தில் ஒரு அரசியல் தீர்வுவேண்டும் என்று புதிய அரசியல் யாப்பிலும் கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.

இந்த நாடு பல்லின மக்கள் பல மதங்கள் வாழும் நாடு.மதச்சார்பற்ற நாடாக புதிய யாப்பு கொண்டுவரப்படவேண்டும் என கோருகின்றோம்.ஆனால் இந்த நாட்டில் அனைத்தையும் தீர்மானிப்பவர்கள் பௌத்தகுருமார் என்கின்ற நிலை காணப்படுகின்றது.இதுஇந்த நாட்டின் எதிர்காலத்திற்கு பாதகமான விடயமாகவே அமையும்.

ஒரு நாடு அபிவிருத்தி அடையவேண்டுமாயின் ஒரு குறுகிய மதத்தின் கீழ் அந்த நாடு இருக்ககூடாது.அந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் அனைத்து சுதந்திரங்களையும் வழங்கவேண்டும்.தேசிய இன மக்களின் உரிமைகளும் மதிக்கப்படவேண்டும்.சமத்துவம் பேணப்படவேண்டும்.அப்போதுதான் இந்த நாடு அபிவிருத்தியடையும்.

Share this article :

Post a Comment

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger