காத்தான்குடியில் நடைபெற்ற தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதி நாள் நிகழ்வு

(லியோன்)

தேசிய  வாசிப்பு  மாதத்தின்   இறுதி  நாள்  நிறைவு நிகழ்வாக மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு   மட்டக்களப்பு  காத்தான்குடியில் நடைபெற்றது .


மட்டக்களப்பு  காத்தான்குடி நகர சபை பொது நூலகம் ஏற்பாட்டில்     “ வாசிப்பின் மூலம் நவீன உலகை வெற்றிக்கொள்வோம் “ எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாதத்தினை சிறப்பிக்கு வகையில் ஒக்டோபர் மாதத்தில்   பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு  பரிசில்கள் வழங்கும் நிகழ்வு காத்தான்குடி நகர சபை செயலாளர் எஸ் எம் எம் ஸபி தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில்  நடைபெற்றது  .
தேசிய வாசிப்பு மாதத்தினை சிறப்பிக்கு வகையில்  வாசிப்பு மரம் உருவாக்கல் , நிகழ்வு பதிவேடு அறிமுகம் , பதாதை தொங்கவிடல் ,மாணவர்களுக்கான கட்டுரை போட்டிகள் , பாடசாலை மாற்றுத்திறன் மாணவர்களுடனான சிறுவர் தின நிகழ்வு ,, பரீட்சைக் காலங்களில் பிள்ளைகளை எவ்வாறு கையாளுவது மற்றும் தயார் படுத்துவது தொடர்பான பெற்றோர்களுக்கான கருத்தரங்கு , வாசிப்பு விழிப்பூட்டல் துண்டு பிரசுரம் வெளியிடல், பொது நூலகம் தொடர்பான சிறப்பு மலர் வெளியீடு போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு இதில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம் வை . சலீம் , கௌரவ அதிதியாக மட்டக்களப்பு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே .சித்திரவேல் மற்றும் காத்தான்குடி நகர சபை உத்தியோகத்தர்கள் , பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள் , பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்