அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஏற்பாட்டில் ஒத்திகை நிகழ்வு


(லியோன்)


மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் காலங்களில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களின் போது ஏற்படக்கூடிய ஆபத்துக்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் திட்டத்திற்கு அமைவாக  தேசிய அனர்த்த முகாமைத்துவ  அமைச்சின்  ஏற்பாட்டில் ஒத்திகை நிகழ்வு இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது .


மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிறுவாகம் இணைந்து இந்த ஒத்திகை  நிகழ்வினை   நடாத்தியது .


இடம்பெற்ற ஒத்திகை நிகழ்வில் அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு சிகிச்சை அழிப்பது அதேபோன்று வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக நடைபெற்ற ஒத்திகையின் போது தெளிவூட்டப்பட்டது .இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகள் , மட்டக்களப்போ போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் ,தாதிய உத்தியோகத்தர்கள் , வைத்தியசாலை அதிகாரிகள் கலந்துகொண்டனர்