"முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எருவில் வேணு இந்தியா பயணம்"

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியன ஒன்றிணைந்து இளைஞர் கழகங்களினூடாக பல இளைஞர் அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அத்துடன் இளைஞர் கழகங்கள் ஊடாக பல கிராமிய விருத்திகளையும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர் அதுமட்டுமல்லாமல் பல நாடுகளுக்கிடையே சர்வதேச உறவுகளையும் ஏற்படுத்தி இளைஞர் வேளைத்திட்டங்களை வழுப்படுத்தி வருகின்றது.

அந்த வகையில் இளைஞர் கழக செயற்பாடுகளில் சிறப்பாக முன்மாதிரியாக செயற்படும் இளைஞர் யுவதிகளுக்கு சர்வதேச நிகழ்வுகளில் பங்குபற்றவதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுக்கின்றது அதனடிப்படையில் எதிர்வரும் 28 ந்திகதி இந்தியாவில் ஆரம்பமாகவிருக்கும் சர்வதேச இளைஞர் பரிமாற்றம் வேலைத்திட்டத்தில் மட்டக்களப்பு எருவிலை சேர்ந்த முன்னைநாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் , மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவரும், ம.தெ.எருவில் பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவருமான எருவில் கிராமத்தைச் சேர்ந்த இரத்தினையா _ வேணுராஜ் என்பவர் பங்கேற்க உள்ளார் இக்குழுவில் இலங்கையில் இருந்து 12 பேர் மட்டுமே கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.