நீரிழிவு தினத்தை சிறப்பிக்கும் விசேட விழிப்பூட்டலும், கலந்துரையாடலும்

(லியோன்)

உலக நீரிழிவு தினத்தை சிறப்பிக்கும் விசேட விழிப்பூட்டலும், கலந்துரையாடலும்  மட்டக்களப்பில் நடைபெற்றது  .


மட்டக்களப்பு சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம் ஏற்பாட்டில் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு விசேட வைத்திய நிபுணர்கள் பொதுமக்களுக்கு  நீரிழிவு தொடர்பான விழிப்பூட்டலும் , கலந்துரையாடலும் மட்டக்களப்பு சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது .

நடைபெற்ற விழிப்பூட்டல் நிகழ்வில் நீரிழிவும் சமூகமும் எனும் தலைப்பில் , குடும்பநல வைத்திய நிபுணர்  வைத்தியர் கே . அருளானந்தம் , கர்ப்பமும் சர்க்கரையும் ஐம் தலைப்பில்  மகப்பேற்றியல் மற்றும் பெண்ணியல் வைத்திய நிபுணர் . எம் . திருக்குமார் , உணவே ஔடதமாக எனும் தலைப்பில் சௌக்கிய விஞ்ஞான பீட வைத்திய நிபுணர் வைத்தியர் கே .டி .சுந்தரேசன்  நீரிழிவும் ஜதீகமும் ஜயந் தெளிதலும் எனும் தலைப்புக்களில் ,விசேட பொது வைத்திய நிபுணர் எம் .உமாகாந் ஆகிய வைத்தியர்கள்  விரிவுரைகளை வழங்கினார்கள் .


நீரிழிவு நோயின் தாக்கம் , நோயின் தாக்கத்தை கட்டுபடுத்துவதற்கான வழிமுறைகள் .உணவு பழக்கவழக்கம்  போன்ற விடயங்கள்  கலந்துரையாடப்பட்டது இந்நிகழ்வில் வைத்தியர்கள் , சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட மாணவர்கள் , பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்