கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி புலைமைப்பரிசில் பங்களதேஸ் பயணம்.


கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி புலைமைப்பரிசில் பங்களதேஸ் பயணம்.


கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி திரு.த.விந்தியன் அவர்கள் புலமைப்பரிசில் கிடைக்கப்பெற்று பங்களாதேஷ் பயணம்.

2016,2017 நடைபெற்ற இளைஞர் பாராளுமன்ற தேர்தலை சிறப்பாக நடாத்தியமை , இளைஞர்  கொடிதினம், துருணு சிரமசக்தி வேலைத்திட்டம். இவ்வாறான திட்டங்களை மாவட்டமட்டத்தில் வெற்றிகரமாக நடத்தியமைக்காக
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று இளைஞர் சேவை அதிகாரிகள் உட்பட 12 இளைஞர் யுவதிகள் கடந்த செவ்வாய்்க்கிழமை   பயணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.