தேசிய ரீதியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பருத்திச்சேனை இளைஞனுக்கு கெளரவிப்பு.

தேசிய ரீதியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பருத்திச்சேனை இளைஞனுக்கு கெளரவிப்பு.

 இம் முறை நடைபெற்ற 43வது தேசிய விளையாட்டு மல்யுத்த போட்டியில் அகில இலங்கை ரீதியில் 2ம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்ற பருத்திச்சேனையைச் சேர்ந்த வீரர் சீனித்தம்பி சிவபாலன் அவர்களை கௌரவிற்கும் நிகழ்வு 21.11.2017 செவ்வாய்க்கிழமை பருத்திச்சேனை மீனாட்சி அம்மன் ஆலய முன்றலில் இடம் பெற்றது.

 மட்டக்களப்பு சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டு கழகத்தின் அனுசரணையுடன் பருத்திச்சேனை கிராம அபிவிருத்திச் சங்கம் தலைமை தாங்கி நடத்திய இந் நிகழ்வில் அதிதியாக மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், மற்றும் சாண்டோ சங்கரதாஸ் கழக தலைவர், மற்றும் பயிற்றுவிப்பாளர் அத்துடன் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகஸ்தர் மா.சசிகுமார் அத்தோடு மீனாட்சியம்மன் ஆலய பரிபாலன சபை தலைவர் மற்றும் கிழக்கொளி இளைஞர் கழக தலைவர் போன்றோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

 சிவபாலன் அவர்களுக்கான கௌரவிற்புகளை கிழக்கொளி இளைஞர் கழகம், மீனாட்சியம்மன் ஆலய பரிபாலன சபையினர்,பருத்திச்சேனை கிராம அபிவிருத்திச் சங்கம், ஆஞ்சநேயா விளையாட்டு கழகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.