(லியோன்)
 வறுமை கோட்டின் கீழ்  வாழும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி
வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில்
நடைபெற்றது.
கிராமிய பொருளாதார
அமைச்சின்  நிதி ஒதுக்கீட்டின் கீழ்
மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின்
வாழ்வாதாரத்தை  ஊக்குவிக்கும் வாழ்வாதார
உதவி வேலைத்திட்டங்கள்   முன்னெடுக்கப்படுகின்றன .
இதன்கீழ்
காத்தான்குடி பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட 
கிராம சேவை பிரிவுகளில்  வறுமை
கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை  ஊக்குவிக்கும்  முகமாக கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி
ஒதுக்கீட்டில் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்
எம் .முசாமில் தலைமையில் காத்தான்குடி பிரதேச செயலகத்தில்  நடைபெற்றது . 
இந்நிகழ்வில் தெரிவு
செய்யப்பட 226  பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டது . இதில் 13 பேருக்கு தையல் மெசின்களும்  , 19 பேருக்கு தச்சு
தொழிலுக்கான உபகரணங்களும்   , 18  பேருக்கு 
மேசன் தொழிலுக்கான உபகரணங்களும்  
மற்றும் 176
 பேருக்கு 
கோழி  குஞ்சிகளும் வழங்கப்பட்டன .
இந்நிகழ்வில் காத்தான்குடி
உதவி பிரதேச செயலாளர் காத்தான்குடி பிரதேச 
செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எம் .சிவராஜா,  கிராமிய பொருளாதார  பிரதி அமைச்சரின்  இணைப்பாளர்களான 
சட்டத்தரணி எம் எ எம் ரூபி , எம் எம் மாகிர் ஆஜியார் , பொருளாதார
அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள் , கிராம
சேவை உத்தியோகத்தர்கள் , பயனாளிகள் என பலர் கலந்துகொண்டனர்