திராய்மடு முருகன் ஆலய கந்த ஸஷ்டி விரத விசேட பூஜை நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு பாலமீன்மடு -  திராய்மடு அருள்மிகு ஸ்ரீ  முருகன்  ஆலயத்தில் கந்த ஸஷ்டி விரத விசேட பூஜைகள்  நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.மட்டக்களப்பு  மாவட்டத்தில் உள்ள  இந்து ஆலயங்களில்  (25) புதன்கிழமை  மாலை கந்த ஸஷ்டி விரத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த சூரசம்ஹார விசேட பூஜைகள்  சிறப்பாக நடைபெற்றது.

சூரபத்மன் என்னும் அரக்கனை அழித்து தர்மத்தினை நிலைநாட்டியதை குறிக்கும் வகையில் கந்த சஸ்டி விரதம் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.

 கந்த ஸஷ்டி விரத்தின் மிக முக்கியத்துவமான நிகழ்வான சூரம்சம்ஹாரத்தினை முன்னிடடு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் சூரசம்ஹார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.


இதனை முன்னிட்டு மட்டக்களப்பு பாலமீன்மடு -  திராய்மடு அருள்மிகு ஸ்ரீ  முருகன்  ஆலயத்தில்  சூரசம்ஹார விசேட பூஜைகள் ஆலய பிரதம  குரு சிவஸ்ரீ  பிரதீபன் சர்மா தலைமையில்  சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில்  பெருமளவான  அடியார்கள் கலந்துகொண்டனர்.