எதிர்வரும் 28 ஆம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு மாமாங்கம் மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தில் இலவ முகாம்

(லியோன்)


மட்டக்களப்பு நூற்றாண்டு நட்சத்திரங்கள் லயன்ஸ் கழகம்ஹோமாகம் லயன்ஸ் கழகத்துடன் இணைந்து பொது மக்களுக்கு இலவசமாக சுகாதார மற்றும் ஆரோக்கிய சேவை வழங்குவதற்காக  மட்டக்களப்பில் இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


எதிர்வரும் 28.10.2017 சனிக்கிழமை காலை 08.30 மணி தொடக்கம் பகல் 01.00 மணி வரை.மட்டக்களப்பு மாமாங்கம் மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தில் இந்த மருத்துவ முகாம் நடைபெறவுள்ளதாக கழகத்தின் செயலாளர் அன்பழகன் குருஸ் தெரிவித்தார்.

இம் மருத்துவ முகாமில் , இலவசமாக வாசிப்புக் கண்ணாடிகள், இலவசமாக சகல நோய்களுக்குமான மருந்துகள், சர்க்கரை நோய்க்கான சிகிச்சைகள், பெண்களுக்கான மார்புப் புற்றுநோய்ப் பரிசோதனை, சிறுவர்கள் மற்றும் வளர்ந்தோருக்கான பல்ச் சிகிச்சை, குடும்பநலம் மற்றும் குடும்பத் திட்டமிடல், சத்துணவு நிகழ்ச்சித் திட்டங்கள் போன்ற பல்வேறு சுகாதார மற்றும் ஆரோக்கிய சேவைகள் பல சிறந்த வைத்தியர்களால் இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 28.10.2017 சனிக்கிழமை   காலை 08.30 மணி தொடக்கம் பகல் 01.00 மணி வரை மட்டக்களப்பு மாமாங்கம் மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தில் நடைபெறும் இவ் இலவசமான மருத்துவ முகாமிற்கு வருகைதந்து சிகிச்சைபெற்று உங்களது ஆரோக்கியத்தைப் பேணுமாறு மட்டக்களப்பு நூற்றாண்டு நட்சத்திரங்கள் லயன்ஸ் கழகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.