டிசம்பர் 31வரை கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றங்கள் இடைநிறுத்தம் -கிழக்கு ஆளுனர்

எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் கிழக்கு மாகாணத்தில் பதிலீடுகள் இல்லாமல் செய்யப்பட்ட ஆசிரிய நிமயனங்களை இடைநிறுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகம தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள சிறிய நடுத்தர வணிக நிறுவனங்களுக்கான தகவல் தொழில்நுட்பம் தொடர்பான செயலமர்வும் கண்காட்சியும் இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் இந்த நிகழ்வு கனடா உலக பல்கலைகழகம் உட்பட தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.

சிறந்த உற்பத்தியை பெறவும் சர்வதேச தரம் வாய்ந்த உற்பத்தியை பெறவும் நவீன தொழில்நுட்பத்தின் தேவையினை கருத்தில்கொண்டு இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகம கலந்துகொண்டார்.சிறப்பு அதிதியாக கனடா உலக பல்கலைகழகத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி லெஷர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாணத்தில் சிறிய நடுத்தர வணிக நிறுவனங்களுகளினை செயற்றிறன் மிக்கதாக மாற்றி அதன் ஊடாக பொருளாதார கட்டமைப்பினையும் தொழில்வாய்;ப்புகளையும் ஏற்படுத்தும் வகையில் இந்த செயலமர்வும் கண்காட்சியும் நடாத்தப்பட்டது.

இதில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட சிறிய நடுத்தர வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள்,பல்கலைக்கழக விரிவுரையாளர்களினால் பல்வேறு வகையான தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதன்போது நிகழ்வினை ஏற்பாடுசெய்தவர்கள் ஆளுனரினால் கௌரவிக்கப்பட்டார்.

இங்கு உரையாற்றிய அவர்,

கிழக்கு மாகாணம் கல்வியில் 9ஆவது மாகாணமாகவே இருக்கின்றது. 8ஆவது இடத்திற்கு வருவதற்கான போட்டி வடமாகாணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்குமே காணப்படுகின்றது.

கல்வித் தரத்தினை உயர்த்துவதற்காக நிர்வாக கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றேன். எதிர்வரும் கா.பொ.த.சாதாரண தர மாணவர்களின் நலனைக்கருதி கிழக்கு மாகாணத்தில் பதிலீடுகள் இன்றி மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்களை டிசம்பவர் 31வரை இடைநிறுத்தியுள்ளேன்.

வேலைவாய்ப்பில்லாமலும் கிழக்கு மாகாணத்திலேயே அதிகளவில் உள்ளனர்.அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகளவிலானோர் தொழில்வாய்ப்பில்லாத நிலையுள்ளது.இந்த நிலைமையினை மாற்றவேண்டியதேவையிருக்கின்றது.