மாவட்ட பாடசாலைகள் கிரிகெட் சங்கம் அங்குரார்ப்பணம் நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம்  அங்குரார்ப்பணம்  நிகழ்வு (30) திங்கள்கிழமை மாலை மட்டக்களப்பு கூட்டுறவு சங்க மண்டபத்தில்  நடைபெற்றது .


மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள்  மட்டத்தில் இருந்து சிறந்த வீரர்களை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்காக கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் தர பாடசாலைகளான புனித மிக்கேல் கல்லூரி ,  மெதடிஸ்த மத்திய கல்லூரி , சிவானந்தா தேசிய பாடசாலை மற்றும் மட்டக்களப்பு இந்து கல்லூரி  ஆகிய ஒன்றிணைந்த கல்லூரிகள்  உத்தியோக பூர்வமாக மாவட்ட பாடசாலைகள் கிரிகெட் சங்கத்தை  அங்குரார்ப்பணம்  செய்யும் நிகழ்வும் சங்க அங்கத்தவர்களை தெரிவு செய்யும் நிகழ்வும் மட்டக்களப்பில் நடைபெற்றது ,   

கிழக்கு பல்கலைக்கழக ஆங்கில துறை விரிவுரையாளரும் , அபிவிருத்தி நிபுணத்துவ  ஆலோசகருமான எஸ் .சசிதரன் ஒழுங்கமைப்பில்          பி டி சி எல் அமைப்பின் அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் கிரிகெட் சங்க  அங்குரார்ப்பணம்  நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது ,

இந்த சங்கத்தின் போசகராக மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர்  கே .பாஸ்கரன் ,  உப போசகராக  உடல் கல்வி உதவி பணிப்பாளர் வி . லவக்குமார் , தலைவராக மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரி  அதிபர் ஜே ஆர் பி .விமல்ராஜ் , பொது செயலாளராக சிவானந்தா தேசிய பாடசாலையின் விளையாட்டுத்துறை ஆசிரியர் எம் பி .குகாதரன் , பொருளாளராக மிக்கேல் கல்லூரி அதிபர் பயஸ் ஆனந்தராஜா , உப தலைவர்களாக சிவானந்தா தேசிய பாடசாலை அதிபர் , எஸ் .தயாபரன் ,இந்து கல்லூரி  அதிபர் எஸ் டி . முரளிதரன் , பயிற்றுவிப்பாளராக மிக்கேல் கல்லூரி விளையாட்டுத்துறை செயலாளர்  கே .சகான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் .


மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் கிரிகெட் சங்க அங்குரார்ப்பணம் நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலயம் மற்றும் பட்டிருப்பு கல்வி வலய விளையாட்டுத்துறை பாட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்