அமிர்தகழி கருணை பாலர் பாடசாலை சிறுவர் மற்றும் ஆசிரியர் தின நிகழ்வு

(லியோன்)

சர்வதேச சிறுவர் மற்றும் ஆசிரியர் தின நிகழ்வு மட்டக்களப்பு அமிர்தகழி கருணை பாலர் பாடசாலையில்  நடைபெற்றது .


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு அமிர்தகழி கருணை பாலர் பாடசாலையில் அதிபர் திருமதி .பிரதீபா தர்ஷன் தலைமையில்   சர்வதேச மற்றும் ஆசிரியர் தின நிகழ்வு பாடசாலையில்  இன்று பிற்பகல் நடைபெற்றது .

சிறுவர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் சிறார்களின் வினோத கலை  நிகழ்சிகளும்  சிறார்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்  

இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்வி  உதவிக் கல்வி பணிப்பாளர்  எம் .புவிராஜா , சிறப்பு அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறுவர் மேன்பாட்டு உத்தியோகத்தர் .டி .மேகராஜன் , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை குழந்தை நல வைத்தியர் டி . பிரபா சங்கர் ஆகியோருடன் பாடசாலை சிறார்களும் , இவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர் .