அமிர்தகழி மெதடிஸ்த பாலர் பாடசாலை சிறுவர் தின நிகழ்வு

(லியோன்)

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் இன்று நடைபெற்று வருகின்றது .


இதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் அணைத்து பகுதிகளிலும் இந்நிகழ்வு இடம்பெற்று வருகின்றது .

இதன் கீழ் மட்டக்களப்பு கல்வி வலயதிற்குற்பட்ட மட்டக்களப்பு அமிர்தகழி மெதடிஸ்த பாலர் பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி . ஞானராஜன்  ஜெயராஜனி தலைமையில் பாடசாலையில் இன்று நடைபெற்றது .

சிறுவர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் சிறார்களின் வினோத கலை  நிகழ்சிகளும், சிறார்களுக்கான  பரிசில்கள் வழங்கி  கௌரவிக்கப்பட்டனர்  


இந்நிகழ்வில் அதிதியாக அமிர்தகழி மெதடிஸ்த ஆலய அருட் திருமதி . கிரேஸ் ரொபின் , சிறுவர்களுக்கான கௌவுன்சிலர் திருமதி . இ .டி . மாணிக்கம் , அமிர்தகழி மெதடிஸ்த ஆலய முன்னாள் உக்கிரானகாரர் செல்வி .வசந்த மற்றும் பாடசாலை சிறார்களின் பெற்றோர்கள்  கலந்துகொண்டனர்