மாமாங்கம் ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

(லியோன்)

நாடளாவிய ரீதியில் சர்வதேச சிறுவர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் விசேட நிகழ்வுகள் இன்று  நடைபெற்று வருகின்றது


சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட சென்ட் ஜோன்ஸ் அம்புலன்ஸ் அமைப்பின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றன

இதன்கீழ் மட்டக்களப்பு மாமாங்கம் ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் பாடசாலையில் கல்வி பயிலும் வறுமை கோட்டின்கீழ் வாழும் குடும்ப மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் வ .முருகதாஸ் தலைமையில்  நடைபெற்றது .


இந்நிகழ்வில் அதிதிகளாக   காந்தி சேவா சங்க தலைவர் .எஸ் செல்வேந்திரன் , மட்டக்களப்பு மாவட்ட சென்ட் ஜோன்ஸ் அமைப்பின் மாவட்ட தலைவர் அல்ஹாஜ் மீரா சாய்பு, மாமாங்கம் கிராம சேவை உத்தியோகத்தர் அன்டன் ஜெபஸ் , மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் கலந்துகொண்டனர் .