மட்டக்களப்பில் 10,000 பனைமுளைகளைவிதைத்தல்:கட்டம் இரண்டு.

'வீட்டுக்கொருமரம் வளர்ப்போம்' என்பது அன்றைய வாசகம், ஆளுக்கொருமரம் வளர்க்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. மரங்கள் இயற்கையின் கொடை. இயற்கைஅன்னையின் மடியில் மலர்ந்தமுதல் குழந்தைதாவரம் தானே! அவற்றைநாம் இல்லாமல் செய்யலாமா? அப்படிச் செய்தால் நன்ற pகெட்டவர்கள் ஆகிவிடமாட்டோமா? வேண்டாம்,நாம் நமக்காகமட்டும் சிந்திப்பதை நிறுத்திவிட்டு உலக நலனையும், எதிர்காலச் சந்ததிகளின் தேவையையும் சேர்த்து சிந்திக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். இந்ததிட்டம் மூலம் பலர் விழிப்படைந்து இது போன்ற பனை மரநடுகைகளை பின் தொடர முன் வரவேண்டும என்கின்ற நோக்கம் வெற்றியடைந்துவருவது பெருமைக்குரியது.


இதனைத்தான் தொலைநோக்குப் பார்வைஎன்றும் பொதுநலசிந்தனைஎன்றும் கூறுகின்றனர்.எமது சுயநலத்துக்காக மாத்திரமல்ல யுத்தத்தினால் குறிப்பாகவடகிழக்கில் வகைதொகையின்றி நீண்ட ஆயுள் கொண்டபனைவிருட்சங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அவற்றை அந்த நிலையில் இருந்து மீட்பதற்கான ஷபுனி தப்பணியின் இரண்டாம் கட்டம் பழுகாமம் மண்ணில் விஷ்வப் பிரம்ம10ஸ்ரீ காந்தன் ஐயா ஆசியுடன் இனிதேநிறைவேறியது.

கிழக்கு இலங்கை இந்துசமயசமுகஅபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் மாவட்டகமல அபிவிருத்தித் திணைக்களத்தின் வழிப்படுத்துதலில் நிக் அண்ட் நெல்லி ஸ்த்தாபனத்தாரின் அனுசரணையில் நடைமுறைப்படுத்தப்படும் 'பசுமையானதேசத்தைமீளுருவாக்கும்'நடவடிக்கை இரண்டில் குளங்களையும் நீரேந்து பிரதேசங்களையும் பாதுகாக்கும் வகையிலும், எதிர்காலசந்ததியினரின் பொலித்தின் மற்றும் பிளாஸ்த்திக் பாவனையைநிறுத்திப னை ஓலைப் பொருட்களுக்கு இருக்கும் கேள்வியினையும் கருத்தில் கொண்டு இத்திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. நான்குமில்லியன் பனைமரங்கள் வடகிழக்கில் மாத்திரம் யுத்தத்தின்போது இழக்கப்பட்டிருக்கின்றன, ;களின் வாழ்வாதாரத்தில் பாரியபங்கினைவகித்துவந்துள்ளது. அதனைமீள் நடுகைசெய்வதுகாலத்தின் கட்டாயமாகும்.

இந்நிகழ்வில் ஆசியுரைவழங்க அழைப்பின் பேரில் வருகைதந்தவிஷ்வப் பிரம்ம10ஸ்ரீ காந்தன் ஐயாவுடன், மட்டக்களப்பு மாவட்ட கமநல திணைக்கள உதவிஆணையாளர் பொறியியலாளர் திரு.ந.சிவலிங்கம்,மற்றும் முன்னால் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தரும், விவசாய பீட சிரேஸ்ட்ட விரிவுரையாளருமான கலாநிதி பிறேம்குமார், கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் மனிதவளஅபிவிருத்திப் பிரிவின் உதவிப்பணிப்பாளர். சி.தணிகசீலன்,கட்டிடத்திணைக்களத்தில் களப் பொறியியலாளராகப் பணியாற்றும் செல்விகலைச் செல்வி, சூழலியலாளர்.செ.ரமேஸ்வரன்,புதுக்குடியிருப்பு விவேகாநந்த கல்லூரியின் முகாமைத்துவப் பணிப்பாளர் க.பிரதீபன்,பழுகாமம் கமநலகேந்திர நிலையத்தின் அபிவிருத்த pஉத்தியோகத்தர்.க.சதிஸ்குமார், திருப்பழுகாமம் உழவர் அமைப்பின் தலைவர் உறுப்பினர்கள் ,தொண்டர்கள் இவர்களுடன் கிழக்கு இலங்கை இந்துசமயசமுகஅபிவிருத்திச் சபையின்தலைவர் திரு.த.துஸ்யந்தன் தலைமைதாங்கஇந்தநிகழ்வின் தொடக்கவைபவம் விவசாயக்கட்டிடத் தொகுதியில் நடாத்தப்பட்டது.

தலைமையுரை வழங்கிய கிழக்கு இலங்கை இந்துசமயசமுகஅ பிவிருத்திச் சபையின் தலைவர் 'இப்பணியின் இரண்டாம் கட்டம் வெற்றி கரமாக நடைபெற அனைவரதும் ஒத்துளைப்புக் கிடைத்துள்ளது, அதற்கு பல வழிகளிலும் பல்கலைக்கழக மட்டத்தில் இருந்து திணைக்கள மட்டம் அதற்கு அப்பால் விவசாகிகள் தொண்டர்கள் என அனைத்து உள்ளங்களினதும் ஒத்துழைப்புடன் இப்பணிநடை பெற்று வருவதுடன், இங்க வருகை தந்துள்ள பெரியவர்கள் புத்தி ஐPவிகள் மூலமான வழிப்புணர்வுநாம் விட்டுச் சென்றாலும் இதனை நீடித்து கொண்டு செல்வதற்கான ஒரு தந்திரோபாயமாகவும் இதனை செய்து வருகின்றோம்'எனக் கூறினார்.

இந்நிகழ்வின் ஆசியுரைவழங்கியகாந்தன் ஐயாஅவர்கள் 'தாவரம், அதாவது வரத்தை தந்து கொண்டிருப்பவை மரங்கள். 1977 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தக் கிராமங்கள் எல்லாம் பசுமையாககாட்சிதந்தனஅதற்குகாரணம் எமது மனங்களில் ஈரம் இருந்தன, ஆனால் நாம் பின்னர் வீரத்துக்குதாவி விட்டனர். அதை'மண்ணில் ஈரம் இருந்தால் பயிர் வளரும் மனதில் ஈரமிருந்தால் உயிர் வளரும்'எனஎன்கவிதையில் கூறியிருக்கிறேன். ஆக வீரத்துக்குபோனதால் ஈரமில்லாதுபோயிற்றுஎன்றார். எனவேஎம் மனதிலும் ஈரமில்லைமண்ணிலும் ஈரமில்லை இதைகாத்திரமாகக் கொண்டு  வருவதற்குநாம் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும் என்றார். துரௌபதைவனவாசகம் போகும்போது நிழல் உள்ளமரங்கள் உண்டாஎனக் கேட்டாராம் ஏனெனில் நிழல் அழலைப் போக்கும். எனவே அத்தகைய பெரும்பணியினைச் செய்கின்ற உங்களை பாராட்டி இப்பணி இனிதே ஈடேறவேண்டும்'எனதனது ஆசியுரையினை வழங்கிவைத்தார்.

உதவி ஆணையாளர் தெரிவிக்கையில் 'மட்டக்களப்பு ஒரு நெல்விளையும் விவசாயபூமிஅதனால் ஆரம்பகாலத்தில் கிட்டத்தட்ட 985 சிறிய,நடுத்தர, பெரியகுளங்கள் இருந்துள்ளன. அவை இன்றுகாணாமற் போய் வெறும் 225 குளங்களேகாணப்படுவதாகவும், இவை மனிதர்களாலும் இயற்கையாலும் அழிந்துபோயுள்ளது,அவைஒழுங்காகப் பராமரிக்கப்படவில்லை,அந்தபெரும் பணியினை இச்சபையினர் முன்வந்துஅவற்றைப் பாதுகாக்கநீரேந்துகட்டுகள்,உப்புத்தடைக் அணைகள் என்பனவற்றின் ஓரங்களில் நிலக்கீழ் நீரைஉறிஞ்சிவைக்கும் மண்ணரிப்பைதடுக்கும் இந்தவிருட்சங்களுக்கானவிதைநடுதல் காலத்தின் கட்டாயம், இதற்குஎங்களாலானஅனைத்துப் பங்களிப்பும் கிடைக்கும் எனவும்,எதிர்காலத்தில் தமதுதிணக்களத்தினால் ஒரு இலட்சம் மதுரமரங்களை நட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்தநடவடிக்கை மூலம் குறைந்துவரும் மழைவீழ்ச்சியினை அதிகரித்து அதன் மூலம் நீரேந்துபிரதேசங்களைநிறைத்துஒருபசுமைப்புரட்சியினைசெய்வதற்கானஅடித்தளம் இதுவாகும்'எனதனதுகருத்தினை கூறினார்.

குலாநிதிபிறேம்குமார் பேசுகையில் 'கிட்டத்தட்ட 500 குளங்கள் காணாமல் அழிந்துதூர்ந்துபோய்விட்டதுஅவற்றைவிட்டாலும் இருக்கின்றகுளங்களை இவ்வாறானநடவடிக்கை மூலமாகபாதுகாக்கவேண்டும். மண்ணின் மைந்தர் என இருந்தகாலம் போய் மண்ணின் மரங்கள் எனநமக்குபரிட்சயமானஎமதுசொந்தமாக இருக்கக்கூடியபனைவிருட்சங்களைநாங்கள் உருவாக்குதல் மிக்கநன்மைதரும் ஒன்றாகும். தொழில் வளர்ச்சியினாலும்,பலமின் சாதனங்களைப் பயன் படுத்துவதனாலும் மாசுநிறைந்த இச்சூழலினைத் தூய்மையாக்குபவைமரங்களே! 'மரங்கள் ஆக்ஸிஜன் தொழிற்சாலை'என்றவாசகம் நாம் அறிந்ததேஅல்லவா! ஆம்,மரங்கள் காற்றினை தூய்மைசெய்கின்றன,மேலும் நிழலைத் தருகின்றன. 'நிழலின் அருமைவெயிலில் தெரியும்'என்பதுபொன்மொழி. வெப்பம் அதிகமாகக் காணப்படக் காரணம் என்ன? நாம் மரங்களைஅழித்ததும்,அதனால் ஏற்பட்டநிழலின்மையுமேகாரணமாகும்.'ஏனகாத்திரமானகருத்தினைதெரிவித்தார்.

உதவிப்பணிப்பாளர் சி.தணிகசீலன் குறிப்பிடுகையில் 'சுயநலத்தின் பிடியில் சிக்கியமானிடசமுதாயம் இயற்கையை அழித்து, மரங்களைவெட்டி,காடுகளைக் குறைத்துதன் தலையில் தானேதீவைத்துக் கொள்கிறது. இவ்வறிவற்றச் செயலைத் தடுக்கவேண்டும். இத்தருணத்தில் மரங்களின் நலனையும்,பயனையும் சிந்திக்கத் தந்தது மிகவும் சரியானதே!எனவேமரங்களைவளர்க்கவேண்டும். மரங்கள் பறவைகள் மற்றும் விலங்குகளின் புகலிடமாய் விளங்குகின்றன. பூமியில் மூன்றில் ஒருபங்குகாடுகள் இருக்கவேண்டும் என்பது இயற்கையின் விதி. இவ்வாறு இருந்தால் நமக்குகிடைக்கும் பயன் அதிகம். காடுகள் மழையைத் தருவதுடனநிலச்சரிவைக் கட்டுப்படுத்துகிறது. மண் அரிப்பைகட்டுப்படுத்துகிறது. கரியமில வாயுவை நிர்ணயம் செய்யும் தன்மைமரங்களுக்குஉள்ளது. புவியின் தட்ப வெட்பத் தன்மையைநிர்ணயிக்கும் காரணிகளாககாடுகள் உள்ளன. அதுமாத்திரமல்லாதுஉலகச் சந்தையில் பொலித்தின் பாவனைகுறைக்கப்பட்டுதடைசெய்யப்பட்டு வருகின்ற இந்த வேளையில் பனையோடுபழகியஎமதுமக்கள் இந்த இடைவெளியை நிவர்த்திக்க எதிர்காலத்தில் பனம் பொருளுக்குகிறாக்கிஏற்படும் நிலைஉள்ளதுஎனவும்,
காடுகள் அழிக்கப்படுவதால் கடல் மட்டம் உயர்வு,புவிவெப்பம் ஏற்பட்டுசிலபகுதிகளில் அதிகமழை,சிலபகுதிகளில் வறட்சிஉருவாகிறது. கடலோரப் பகுதிகளில் மரங்கள் வளர்க்கப்படும்போதுஅலைகளைகட்டுப்படுத்தும் சக்திமரங்களுக்குஉண்டாகிறது. புவியைக் காத்தால் தான் உயிரினங்களைக் காக்கமுடியும். ஆகவே இளைஞர்கள்,பாடசாலைமாணவர்கள் மரம் நடுவதைஒருபொழுதுபோக்காகக் கொண்டுஅவற்றைவிளையாட்டுவிளையாட்டாகநட்டுஎமதுஎதிர்காலத்தைபாதுகாக்கவேண்டுமஎனவும் குறிப்பிட்டார்.
சூழலியலாளர் ரமேஸ் தனதுகருத்தாகஎமது சூழலைபசுமையாக்குவதுடன்,யானைகளின் அட்டகாசத்தினைஎதிர்துபோராடுவதற்கான இயற்கைஅரனாக இவ்வாறுவயல் குளங்கள் நிறைந்த எல்லைகளில் பனைவிருட்சங்கள் நடுவது நல்லபலனை தரும் ஒருதிட்டமாகும் எனவும், இந்ததிட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அதனால் விழ்ப்படைந்தபலஅமைப்புகள் கிராமமக்கள் ஒன்றிணைந்துஎல்லைக் கிராமங்களில் நடுகைபண்ணிவருவது இந்தநல்லதிட்டத்துக்குகிடைத்தவெற்றிஎனவும் கூறினார்.
அதன் பின்னர் பழுகாமம் கமநல எல்லைக்குட்பட்ட உப்புத்தண்ணி தடைசெய்யும் ஆத்துக்கட்டில் ஒருதொகைபனம் விதைகள் அனைவராலும் விதைக்கப்பட்டன.
மக்கள் பயனுறசெய்யும் மூன்றுசெயல்கள் நிலையானதர்மங்கள் ஆகும் :

1. மக்கள் தாகம் தீர்க்ககிணறுவெட்டுவது
2. அறியாமைஅகற்றும் கல்விபுகட்டுவது
3. நிழல் தரும் மரம் நடுவது.

இவை மூன்றும் நாம் மறைந்தபிறகும் நமக்கானநன்மைகளைதேடித் தரும். அசோகர் போர் செய்துபலரைக் கொன்றார் என்பதைவிடஅவர் சாலையெங்கும் மரம் நட்டினார் என்பதேபலரின் நினைவில் நிற்கிறது. குழந்தையொன்றுபிறந்தால் அதன் பெயரில் தேக்குமரம் நடலாம்,வளர்ந்தபின் பலன் தரும். திருமணங்களில் மாமரம்,தென்னங்கன்று பரிசளிக்கலாம்,வாழ்வாங்கு வாழும். அன்புக்குரியவர் இறந்தால் அவர் பெயரில் வேம்புநடலாம்,நிழலாகிநிற்கும்.
குழந்தைகளை மரங்களை நேசிக்ககற்றுக் கொடுத்தால் அவைமனிதர்களை நேசிக்கவும் எளிதில் கற்றுக் கொள்ளும். குழந்தைகளிடம் ஜீவகாருண்ய ஒழுக்கம் வரசெல்லப் பிராணிகளை வளர்க்க பழக்கலாம். சுத்தம், இடமின்மை சவால்கள் ஏற்படும் சூழலில் செடிகள் வளர்ப்பதே சிறந்தமனப்பயிற்சி.