தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நியமனங்கள் பொருத்தமானவர்களுக்கு மட்டும் வழங்கப்படவேண்டும் -மட்டு.மாவட்ட இளைஞர் சம்மேளன தலைவர்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நியமனங்கள் நியாயமானதாக இருக்க வேண்டும். அரசியல் வாதிகளினுடைய சிபார்சுகளுக்கு உட்படாத வகையில் பொருத்தமானவர்களுக்கு தகமை உடையவர்களுக்கு மாத்திரமே வழங்கப்பட வேண்டும் என  மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் ச.திவ்வியநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் தேசிய  இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் நாயகத்திற்கு இன்று திங்கட்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தேசிய இளைஞர் சேவைகள் மன்றமானது இந்த நாட்டில் இளைஞர் கழகங்களுக்கூடாக இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை தொண்டர் அடிப்படையில் பாரியளவில் முன்னெடுத்து வருகின்ற ஒரு அமைப்பாகும்.

அதன் கீழ் கிராம மட்டத்தில் இளைஞர் கழகங்களுக்குகூடாக பிரதேச, மாவட்ட, தேசிய ரீதியில் பல இளைஞர் யுவதிகள் இரவு பகலாக தங்களை அர்ப்பணித்து தொண்டர் அடிப்படையில் இளைஞர் அபிவிருத்திக்கு தங்களை அர்ப்பணித்து செயற்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இளைஞர் அபிவிருத்திக்கென நியமிக்கப்படும் உத்தியோகஷ்தர்கள் இளைஞர் கழகங்களில் பாடுபட்ட இளைஞர் கழக செயற்பாடுகளை நன்கறிந்தவர்களுக்கே வழங்கப்பட வேண்டும்.
அதை கவனத்தில் கொள்ளாது   நியமனங்கள்
வழங்கப்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் இளைஞர் கழக செயற்பாடுகளுக்கு இளைஞர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ள முடியாது போகலாம்.

இதனை அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை கவனத்தில் கொள்ள வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நியமனங்கள் நியாயமானதாக இருக்க வேண்டும். இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்  இருவகையான (இளைஞர் சேவை உத்தியோகஸ்தர், முகாமைத்துவ அலுவலர் )  உத்தியோகஸ்தர் வெற்றிடங்களுக்கு ஆளணிகளை நியமிப்பதற்கான விண்ணப்பம் கோரப்பட்டு நேர்முகத்தேர்வும் நடாத்தி முடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் சில தினங்களில் குறித்த நியமனங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வழங்கப்படும் நியமனங்கள் நியாயமானதாக பக்கச்சார்பற்றதாக, அரசியல் வாதிகளினுடைய சிபார்சுகளுக்கு உட்படாத வகையில் பொருத்தமானவர்களுக்கு தகமை உடையவர்களுக்கு மாத்திரமே வழங்கப்பட வேண்டும் என்றும் அதில் கேட்டுள்ளார்.