மட்டக்களப்பு மட்டிக்களி பகுதியில் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன

(லியோன்)

மட்டக்களப்பு மட்டிக்களி பகுதி வீடு ஒன்றில் இருந்து பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  அமிர்தகழி மாரியம்மன் வீதி மட்டிக்களி பகுதி வீடு ஒன்றில் இருந்து 4 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகள்  (12) வியாழக்கிழமை மாலை கொள்ளையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு  பொலிஸார் தெரிவித்தனர்.

குரித்த சம்பவம் (12) வியாழக்கிழமை மாலை வீட்டில் ஒருவரும் இல்லாத நேரத்தில் வீட்டின் ஜன்னல்  உடைக்கப்பட்டு வீட்டின்  அறையில் இருந்த நகைகளை கொள்ளையிட்டப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்   .
சம்பவ இடம்பெற்ற இடத்திற்கு  சென்ற  மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தீகா வதுற தலைமையிலான பொலிஸ் குழுவினர்  மற்றும் மட்டக்களப்பு குற்றத்தடவியல் பிரிவு பொலிஸ் குழுவினர் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளன. .